For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நேற்றும்... இன்றும்... டெக்னிக்கல் குழப்பத்தால் முடங்கி பதிவர்களை டென்ஷனாக்கி வரும் “டுவிட்டர்”!

Google Oneindia Tamil News

சென்னை: பேஸ்புக்கிற்கு அடுத்தபடியாக பாப்புலராக இருக்கும் சமூக வலைத்தளமான டுவிட்டர் இணையதளம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நேற்று மாலை சிறிது நேரம் இயங்காமல் பயனாளிகளை படுத்திஎடுத்தது.

மதியம் முடங்கிய டுவிட்டர் பக்கத்தில் மன்னிக்கவும் என்ற வாசகமே இடம்பெற்றது. எனினும், மீண்டும் கொஞ்ச நேரத்திலேயே டுவிட்டர் இணையதளம் பழையபடி செயல்பட ஆரம்பித்தது. இந்நிலையில் மாலை மீண்டும் முடங்கியுள்ளது டுவிட்டர்.

ஏற்கனவே பேஸ்புக் இது போன்ற கோளாறுகளில் அடிக்கடி சிக்குவது குறிப்பிடத்தக்கது.

நேற்றும் பிரச்சினை:

நேற்றும் பிரச்சினை:

கணினி பயன்பாட்டாளர்கள் நேற்று மாலை டுவிட்டர் இணையதளத்தினை திறக்கும்போது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டிருப்பதாகவும், அதனை சரி செய்து கொண்டிருப்பதாகவும், விரைவில் வழக்கமான சேவை தொடரும் என்றும் திரையில் தகவல் தோன்றியது.

தவித்த டுவிட்டர்கள்:

தவித்த டுவிட்டர்கள்:

சிறிது நேரம் நீடித்த இந்த பிரச்சினையால், பல்லாயிரக்கணக்கான டுவிட்டர் வாடிக்கையாளர்கள் தகவல்களை டுவிட் செய்ய முடியாமல் சிரமப்பட்டனர். பின்னர் தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்டு மாலை 7.10 மணியளவில் வழக்கம்போல் செயல்பட்டது.

இன்றும் கோளாறு:

இன்றும் கோளாறு:

இந்நிலையில் இன்று மதியம் 2.30 மணியளவில் மீண்டும் டுவிட்டர் முடங்கி, மீண்டும் பழைய நிலைக்கு சில நிமிட அவகாசத்தில் திரும்பியது. எனினும், மாலை 4 மணியளவில் மீண்டும் முடங்கியுள்ளது டுவிட்டர்.

செல்போனில் நோ பிராப்ளம்:

செல்போனில் நோ பிராப்ளம்:

இதனால் ஹேஸ் டேக்குக்கு புகழ்பெற்ற டுவிட்டருக்கே #TwitterDown என்று ஹேஸ் டேக் போட்டு கலாய்த்து வருகின்றனர் சமூக வலைதள வாசிகள். எனினும், செல்போனில் உள்ள டுவிட்டர் அப்ளிகேசன் மட்டும் எந்த பிரச்னையும் இல்லாமல் வழக்கம்போல் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

English summary
Twitter was unavailable for users worldwide with the site apparently suffering a total outage followed by serious access problems lasting over an hour.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X