தூக்கி அடிச்சிருவேன் பாத்துக்க.. டிரெண்ட் ஆன விஜயகாந்த்!
சென்னை: டெல்லியில் டிவி ரிப்போர்ட்டரிடம் விஜயகாந்த் தகராறு செய்த சம்பவத்தை வைத்து, தமிழ் டிவிட்டர் பயனாளர்கள் #தூக்கிஅடிச்சிருவேன்பாத்துக்க என்று ஒரு ஹேஷ்டேக் உருவாக்கி இந்திய அளவில் டிரெண்ட் செய்துள்ளனர்.
அனைத்துக் கட்சி குழுவுடன் பிரதமரை சந்தித்த விஜயகாந்த், டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது ஜெயா டிவி நிருபரின் கேள்விக்கு பதிலளிக்க மறுத்த விஜயகாந்த், 'மைக்கை தூக்கிஅடிச்சிருவேன்பாத்துக்க' என்று கூறி, எழுந்து நின்று அநாகரீகமாக நடந்து கொண்டார்.

டெல்லிக்கு விஜயகாந்த் சென்ற மைய கருத்து மறந்துபோய், மக்கள் மனதில், இப்போது அவரின் தகராறு நினைவில் நிற்கிறது.
இந்த நிலையில், விஜயகாந்த்தை கேலி செய்யும் விதமாக #தூக்கிஅடிச்சிருவேன்பாத்துக்க என்று ஹேஷ்டேக் உருவாக்கி, அதில் பலவாறாக கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர் தமிழ் டிவிட்டர் பயனாளர்கள்.
இந்த டேக், அகில இந்திய அளவில் டிரெண்ட் ஆனதால், சோஷியல் மீடியா பயனாளர்கள் அனைவர் கவனத்துக்கும் சென்றுவிட்டது.
கரகாட்டக்காரன் திரைப்படத்தில் டப்பா காரை தள்ளிக் கொண்டு செல்லும் சகாக்களை பார்த்து, மானம் போச்சி என்பார் ஹீரோ ராமராஜன். அப்போது பார்த்து, பேரீச்சம்பழம் விற்பனை செய்யும் கதாப்பாத்திரம், அந்தபக்கமாக, 'பழைய இரும்பு தகரத்துக்கு பேரீச்சம்பழம்..' என்று கூவிக்கொண்டு செல்லும்.
அப்போது கவுண்டமனி ஒரு டயலாக் அடிப்பார் நியாபகம் இருக்கிறதா. இருந்த கொஞ்சம் மானத்தையும், இவன் வாங்கிட்டான்...என்று கவுண்டமணி சொல்வார். அந்தக் கதையாகியுள்ளது இப்போது.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications