அது நாற வாய்.. அட.. இப்பவும் அதே நாற வாய்தான்.. அனுஷ்காவை "பாராட்டி"க் கலாய்க்கும் ரசிகர்கள்!
சென்னை: விராத் கோஹ்லியைத் திட்டுவதாக இருந்தால் கூடவே அனுஷ்கா சர்மாவையும் சேர்த்துத் திட்டுவதை கொஞ்ச காலமாக சிலர் வழக்கத்தில் வைத்துள்ளனர். சமீப காலமாக அது சற்று குறைந்திருந்தது. இந்த நிலையில் மறுபடியும் கலாய்த்தலை ஆரம்பித்து விட்டனர் குசும்புக்கார ரசிகர்கள்.
விராத் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்றுள்ளதைத் தொடர்ந்து பலரும் கோஹ்லி அன்கோவைப் பாராட்டி வருகின்றனர்.
ஒரு ஒரு "குரூப் ஆப் ரசிகர்கள்" மட்டும் அனுஷ்காவை விழுந்து விழுந்து பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அது பாராட்டு அல்ல, வஞ்சப் புகழ்ச்சி என்பதை சற்று உற்று நோக்கினால் அறிய முடிகிறது.

டிவிட்டரில் குவியும் பாராட்டுகள், குசும்புகள்
டிவிட்டரில் இந்திய அணியின் வெற்றி குறித்து கோஹ்லியைப் பாராட்டியும் கிண்டலடித்தும் ஏகப்பட்ட கமெண்டுகள் வலம் வருகின்றன. கூடவே அனுஷ்காவையும் இதில் கோர்த்து விட்டுள்ளனர் ரசிகர்கள்.

பாராட்டுறாங்களா, ஓட்டுறாங்களா
ஆனால் சில கமெண்டுகளைப் பார்த்தால் அனுஷ்காவை ஓட்டுவது போல உள்ளது. சில கமெண்டுகள் பாராட்டுவது போல உள்ளது. கடவுள் பாதி, மிருகம் பாதி கலந்து வைத்த கமெண்டுகள் தான் என்று பாட்டுப் பாடும் அளவுக்கு இவை நிரம்பிக் கிடக்கின்றன.
|
சிக்கன் பிரியாணி
இந்தப் பெயரில் உள்ள இந்த அன்பர் இப்படிப் பாராட்டியுள்ளார்... இந்தியாவின் வெற்றிக்குக் காரணம் சர்மாதான்.. 1. பந்து வீச்சின் மூலம் இஷாந்த் சர்மா. 2. பேட்டிங்கின் மூலம் ரோஹித் சர்மா. 3 இலங்கைக்கு வராமல் இருந்ததன் மூலம் அனுஷ்கா சர்மா...ஓ!
|
என்னப்பா நியாயம் இது
ரிஷப் தாக்கூரின் வருத்தம் இது.. இந்தியா தோற்றால் அனுஷ்கா சர்மாவை குற்றம் சாட்டுகிறார்கள். இந்தியா ஜெயித்தால் இப்போது இஷாந்த் சர்மாவைப் பாராட்டுகிறார்கள்.. என்ன நியாயம் இது கோஹ்லி... என்று வருத்தப்பட்டுள்ளார்.
|
அருமையாக ஆடினீர்கள் அனுஷ்கா
அபிமன்யூ குல்கர்னி என்பவர் ரொம்பக் குசும்புக்காரர் போல.. இந்தியா 117 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி. அருமையாக ஆடினீர்கள் அனுஷ்கா என்று கலாய்த்துள்ளார்.
|
அதானே!
தீபாங்கர் என்பவர் போட்டுள்ள டிவிட்டில், இந்தியா கோஹ்லி தலைமையில் முதல் டெஸ்ட் தொடரை வென்றுள்ளது. ஏன் யாரும் அனுஷ்காவைப் பாராட்டாமல் உள்ளார்கள் என்று நியாயம் கேட்டுள்ளார்.. காந்தி தேசமே நியாயம் இல்லையா...!
|
வெல்டன் அனுஷ்கா
இது சோபி செளத்ரியின் பாராட்டு... ஹேய் பேப் அனுஷ்கா சர்மா.. இந்தியாவையும், கோஹ்லியையும் வெல்ல வைத்ததற்கு வாழ்த்துகள். லாஜிக் இல்லை இல்லையா... திட்டுக்கள் மட்டுமல்ல பாராட்டுகளும் உங்களுக்கு உரித்தானதுதான் என்று "ஹக்" செய்து பாராட்டியுள்ளார்.
|
இன்னா "நெக்கல்" பாஸ்...!
இவரது குசும்பு சற்று செம ரகம்தான்... விராத் சர்மாவை ஹக் செய்து கிஸ் செய்தார்.. ஆனால் அது அனுஷ்கா அல்ல என்று வாரியுள்ளார்.
|
ஒரு 'ஆஃப் பீட்' டிவிட்
இது நாஸ்டால்ஜியா மாதிரி.. இதற்கும் அனுஷ்காவுக்கும் துளிக் கூட சம்பந்தம் இல்லை பாஸ்.. ஆப் பீட் மாதிரின்னு வச்சுக்கலாம். கடந்த முறை இந்தியா, இலங்கைய வென்றபோது விராத் கோஹ்லிக்கு நான்கு வயசுதானாம்.. படத்தோடு பகிர்ந்துள்ளார் ஆல்ட் கிரிக்கெட்.

விட மாட்டாங்க பாஸ்
அடங்காத அன்பர்களாச்சே நம்மவர்கள்.. விராத் கோஹ்லி கண்களில் தொர தொரன்னு கண்ணீர் வழிய, மூக்கைச் சிந்தியபடி, ஐ தேங் ஒன் அன்ட் ஆல் பார் த சப்போர்ட் தே கேவ் மீ ஆல் தீஸ் இயர்ஸ் அன்ட்.. என்று மைக்கைப் பார்த்து சர்வதே கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவிக்கும் வரை விட மாட்டார்கள் இந்த டிவிட்டர் குசும்பர்கள்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications