இரு அணிகள் நிச்சயம் இணையும்.. ஓபிஎஸ் ஏன் குழுவை கலைத்தார்? ஜெயக்குமார் ஷாக்
பிரிந்து கிடக்கும் இரு அணிகளும் நிச்சயம் ஒன்றிணையும். பேச்சுவார்த்தை குழுவை ஓபிஎஸ் ஏன் கலைத்தார் என்று தெரியவில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
சென்னை: முதல்வர் பழனிசாமி அணியும், ஓபிஎஸ் அணியும் நிச்சயம் இணையும் என்று நிதித் துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறினார்.
ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் ஓபிஎஸ் அணி அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றது. சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்ற பின்னர் இரு அணிகளும் சேரும் வாய்ப்பு உருவானது.
எனினும், இரு அணிகளும் இணைவதில் சிக்கல் நீடித்தே வருகிறது. ஒரு அணியினர் மற்றொரு அணியினர் மீது மாற்றி மாற்றி குற்றச்சாட்டுக்களை வைத்தே வருகின்றனர்.

இணைப்பு கிடையாது
இந்நிலையில், நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் இரு அணிகள் இணையாது என்று கூறினார். மேலும், பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அமைக்கப்பட்ட குழுவும் கலைக்கப்பட்டுவிட்டது என்று ஓபிஎஸ் தெரிவித்தார்.

நிச்சயம் இணையும்
இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், இரு அணிகளும் நிச்சயம் இணையும் என்று கூறினார். பேச்சுவார்த்தை குழுவை ஓபிஎஸ் ஏன் கலைத்தார் என்று தெரியவில்லை என்றும் ஜெயக்குமார் கூறினார். மேலும், இரு அணிகள் இணைந்து செயல்பட வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும் தெரிவித்துள்ளார்.

சிறுவணிகர் நலன்
மேலும், 66 அத்தியாவசிய பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டிருக்கிறது. ஜிஎஸ்டியில் சிறுவணிகர்கள், உற்பத்தியாளர்கள் நலன் பாதுகாக்கப்படும் என்றும் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

சட்டசபைக் கூட்டம்
வரும் சட்டசபை கூட்டத்தொடரில் ஜிஎஸ்டி மசோதா நிறைவேற்றப்படும் என்று ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அதன் பின்னர் ஏற்படும் சிக்கல்கள் குறித்து பின்னர் பேசப்படும் என்று ஜெயக்குமார் கூறினார்.
-
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு












Click it and Unblock the Notifications