சென்னை டிஜிபி அலுவலகத்தில் நேற்று தீக்குளிக்க முயன்ற காவலர்கள் 2 பேர் கைது
சென்னை டிஜிபி அலுவலகத்தில் நேற்று தீக்குளிக்க முயன்ற காவலர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Recommended Video

சென்னை: டிஜிபி அலுவலகத்தில் நேற்று தீக்குளிக்க முயன்ற காவலர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஆயுதப்படை காவலர்கள் ரகு, கணேஷ் ஆகியோர் நேற்று சென்னை டிஜிபி அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றனர். பணியிட மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் 2 பேரும் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டனர்.

அவர்களை சக காவல்துறையினர் மீட்டனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தேனியில் இருந்து ராமநாதபுரத்துக்கு பணியிட மாற்றம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தீக்குளிக்க முயன்றதாக கூறிய அவர்கள், தேனி மாவட்ட எஸ்பி உள்ளிட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் சாதி ரீதியாக ஒதுக்கி இடமாற்றம் செய்ததாக புகார் தெரிவித்தனர்.
இந்நிலையில் தற்கொலை முயற்சி உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த மெரினா போலீசார், ஆயுதப்படை காவலர்கள் ரகு மற்றும் கணேஷை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட காவலர்கள் இருவர் மீதும் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காவலர்களின் குற்றச்சாட்டுக்கு தேனி மாவட்ட எஸ்பி நேற்றே மறுப்பு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications