ஓசூரில் இடி தாக்கி 2 பேர் பலி.. மழைக்காக மரத்தடியில் ஒதுங்கியபோது சோகம்
ஓசூரில் இடி தாக்கியதில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி: ஓசூரில் இடி தாக்கியதில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்கள் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென்தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதனிடையே இன்று மாலை கர்நாடக மாநிலம் பெங்களூரு நகரின் பல இடங்களில் இடியுடன் ஆலங்கட்டி மழை கொட்டித் தீர்த்தது. இதனால் பெங்களூரு நகரம் குளிர்ந்தது.
இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரிலும் இன்று மாலை இடியுடன் கோடை மழை கொட்டியது. அப்போது அஞ்சட்டி பகுதியில் இடி தாக்கியதில தீங்கோட்டையை சேர்ந்த மாரியப்பன், சாந்தனபள்ளியை சேர்ந்த நடராஜ் ஆகியோர் உயிரிழந்தனர்.
மழைக்காக மரத்தடியில் ஒதுங்கிய போது இடிதாக்கியதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications