மதுரையில் விஷவாயு தாக்கி 2 பேர் பலி: குடும்பத்தாருக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம்
மதுரை: மதுரை-தேனி சாலையில் உள்ள ஹெச்.எம்.எஸ். காலனியில் கழிவு நீர் தொட்டியை (பாதாள சாக்கடை சுத்தம் செய்கையில் விஷவாயு தாக்கி 2 தொழிலாளர்கள் பலியானார்கள்.
மதுரை மாநகராட்சியில் கழிவுநீரை அகற்றுவதற்கு 2 மோட்டார் பைபர்கள் உள்ளன. இவை பழுதடைந்துள்ளதால், கழிவுநீரை அகற்றும் பணியில் தற்காலிக ஒப்பந்த பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தற்காலிக ஒப்பந்த பணியாளர்களான மதுரை ஆரப்பாளையத்தைச் சேர்ந்த முனியாண்டி மற்றும் சென்னையைச் சேர்ந்த விசு ஆகியோர் மதுரை-தேனி சாலையில் உள்ள ஹெச்.எம்.எஸ். காலனியில் கழிவுநீர் தொட்டியை சுத்தப்படுத்துவதற்கு தொட்டிக்குள் இறங்கி உள்ளனர். அப்போது அவர்களை விஷவாயு தாக்கியதில் மூச்சு திணறி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இது குறித்து மதுரை மாநகராட்சி ஆணையாளர் கதிரவன் கூறுகையில்,
விஷவாயு தாக்கி பலியானவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்படும். நிவாரணத் தொகை நாளைக்குள் வழங்கப்படும். இந்த சம்பவம் பற்றி விரிவான விசாரணை நடத்தப்படும் என்றார்.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications