நாங்க எம்ஜிஆரோட தம்பிங்க.... ஒண்ணாத்தான் இருக்கோம்: தம்பிதுரை நம்பிக்கை : வீடியோ

அதிமுகவின் இரு அணிகளும் ஒன்றாகத்தான் இருக்கிறோம். நாங்கள் எம்ஜிஆரின் தம்பிகள். எங்களுக்குள் கருத்து வேறுபாடு கிடையாது என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறினார்.

Subscribe to Oneindia Tamil

மதுரை: அதிமுகவின் இரு அணிகளும் விரைவில் இணையும். நாங்களெல்லாம் எம்ஜிஆரின் தம்பிகள். எங்களுக்குள் வேறுபாடு இல்லை என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறினார்.

ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் அதிமுக சசிகலா அணி, ஒபிஎஸ் அணி என இரண்டாக பிரிந்தது. சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைக்குச் சென்றுவிட்டார். இப்போது பிரிந்த அணிகள் ஓபிஎஸ் அணி, எடப்பாடி அணி என்று செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.

 Two faction of Admk united and we are brothers of MGR said Thambi durai

அந்த இரண்டு அணிகளும் விரைவில் இணையும் என கடந்த சில வாரங்களுக்கு முன்பு பரபரப்பாகப் பேசப்பட்டது. ஆனால் பேச்சு வார்த்தைக்கு என இரு அணிகளிலும் தனிக் குழுக்கள் அமைக்கப்பட்டும் எந்த முன்னேற்றமும் இல்லை. இரு அணிகளும் இன்னும் ஒருவரையொருவர் தாக்கிப் பேசிக்கொண்டுதான் உள்ளனர்.

இந்நிலையில் எம்ஜிஆரின் நூற்றாண்டு விழாவை விமரிசையாகக் கொண்டாட எடப்பாடி அணியினர் முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய மக்களவை துனை சபாநாயகர் தம்பி,'' இரண்டு அணிகளும் இணையும். நாங்கள் எம்ஜிஆரின் தம்பிகள். ஜெயலலிதா உருவாக்கியவர்கள் நாங்கள். கருத்து வேறுபாடு எங்களுக்குள் கிடையாது. இணைந்தே உள்ளோம்.

எம்ஜிஆரின் நூற்றாண்டு விழாவை இணைந்தே கொண்டாடுவோம்'' என கூறினார். மேலும் ''மேட்டூர் அணை தூர் வாரும் பணி எந்த புகார்களும் இன்றி சிறப்பாக நடந்துகொண்டுள்ளது'' என கூறினார். ஆனால் இதுவரை இரண்டு அணிகளும் இணையும் செய்தி குறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+