ஓபிஎஸ் ஆதரவு எண்ணிக்கை கூடுகிறது? தென்காசி, மயிலாப்பூர் எம்.எல்.ஏக்கள் ஆதரவு?
முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துக்கான ஆதரவு அதிகரித்து வருகிறது. தென்காசி மற்றும் மயிலாப்பூர் எம்.எல்.ஏக்களும் முதல்வர் ஓபிஎஸ்க்கு ஆதரவு தெரிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு தென்காசி மற்றும் மயிலாப்பூர் தொகுதி எம்.எல்.ஏக்களும் ஆதரவு தெரிவிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு இதுவரை 5 எம்.எல்.ஏ.க்கள் வெளிப்படையாக ஆதரவு தெரிவித்துள்ளனர். எஞ்சிய எம்.எல்.ஏ.க்களை மன்னார்குடி கோஷ்டி சிறைபிடித்து வைத்துள்ளது.

அதேநேரத்தில் அதிமுக மூத்த தலைவர்கள், நிர்வாகிகள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், அமைச்சர்கள் பலரும் ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் அணி திரண்டு வருகின்றனர். அதிமுக அவைத் தலைவர் மதுசூதனனும் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
இதனிடையே தென்காசி எம்.எல்.ஏ. மோகன்தாஸ் பாண்டியன். மயிலாப்பூர் எம்.எல்.ஏ. மாஜி போலீஸ் அதிகாரி நட்ராஜ் ஆகியோரும் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.












Click it and Unblock the Notifications