மழை நீரில் வழுக்கி விழுந்த பலூன் வியாபாரி பரிதாபமாக சாவு
சென்னை: சென்னை திருவொற்றியூரில் மழைநீரில் வழுக்கி விழுந்த பலூன் வியாபாரி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவொற்றியூரில் உள்ள சிவசக்தி நகர் 1-வது தெருவில் வசித்து வந்தவர் ராமமூர்த்தி ( 60). இவர் அந்த பகுதியில் பலூன் வியாபாரம் செய்து வந்தார். இவருடைய மனைவி விஜயலட்சுமி. இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர்.

கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக சிவசக்தி நகர் பகுதியில் இடுப்பளவு தண்ணீர் தேங்கி உள்ளது. எனவே வீடுகளில் தங்கி இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டு அங்குள்ள தனியார் பள்ளியில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். விஜயலட்சுமியும் தனது மகள்களுடன் அந்த பள்ளியில் தங்கினார்.
ராமமூர்த்தி மட்டும் மழைநீர் சூழ்ந்து உள்ள தனது வீட்டில் தனியாக படுத்து இருந்தார். நேற்று அதிகாலையில் வீட்டில் இருந்து வெளியே வந்த ராமமூர்த்தி, மழைநீரில் வழுக்கி விழுந்து தலையில் அடிப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
காலையில் வீட்டுக்கு வந்த விஜயலட்சுமி, வீட்டின் முன்புறம் தேங்கி நின்ற மழைநீரில் ராமமூர்த்தி பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவரது உடலை பார்த்து விஜயலட்சுமி கதறி அழுத்தத்தைக் கண்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்தனர்.
அதனையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதேபோல, மணலி பெரியார் நகரை சேர்ந்தவர் நரசிம்மமூர்த்தி (75). வீட்டில் தனியாக படுத்து இருந்த இவர், பலத்த மழையால் ஏற்பட்ட குளிரினால் பரிதாபமாக உயிரிழந்தார்.
-
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி












Click it and Unblock the Notifications