பள்ளித் தேர்வில் தோல்வி – பெற்றோருக்கு பயந்து அரளிவிதை சாப்பிட்ட இரண்டு மாணவர்கள்!

Subscribe to Oneindia Tamil

உத்தமபாளையம்: தேனியில் மதிப்பெண் குறைந்ததால் இரண்டு மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ள முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் குச்சனூர் அருகில் உள்ள பாலார்பட்டியை சேர்ந்தவர் பிரபு. இவர் குச்சனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

அதே பகுதியை சேர்ந்தவர் சரவணக்குமார். அதே பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

மதிப்பெண் தேர்ச்சி அட்டை:

இவர்கள் 2 பேருக்கும் கடந்த மாதம் மதிப்பெண் தேர்ச்சி அட்டை வழங்கப்பட்டது. குறைந்த மதிப்பெண்கள் எடுத்ததால் 2 பேரும் தேர்ச்சி அடையவில்லை.

பெற்றோரிடம் மறைப்பு:

தங்களது மதிப்பெண் அட்டைகளை பெற்றோரிடம் காட்டாமல் வைத்திருந்தனர். பெற்றோர்கள் கேட்டபோது இன்னும் எங்களுக்கு தேர்ச்சி அட்டை வழங்கவில்லை என தெரிவித்தனர்.

மதிப்பெண் குறைந்ததால் பயம்:

இருந்த போதும் பெற்றோரிடம் மாட்டிக்கொண்டால் அவர்கள் திட்டுவார்கள் என பயந்து தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தனர்.

தற்கொலைக்கு அரளி விதை:

இதனை வகுப்பறையில் 2 பேரும் பேசிக்கொண்டிருந்தனர். அதன்படி நேற்று காலை பள்ளிக்கு வந்த மாணவர்கள் இடைவேளையின்போது வெளியே சென்று ஒரு தோட்டத்தில் இருந்த அரளிவிதைகளை சாப்பிட்டனர்.

மயங்கி கிடந்த மாணவர்கள்:

மாணவர்கள் வகுப்பறைக்கு திரும்பாததால் மற்ற மாணவர்கள் இது குறித்து தங்கள் ஆசிரியரிடம் தெரிவித்தனர். அவர்கள் தேடி பார்த்தபோது தோட்டத்தில் 2 பேரும் மயங்கி கிடந்தனர்.

மருத்துவமனையில் அனுமதி:

பதறிய ஆசிரியர்கள் அவர்களை சின்னமனூர் அரசு மருத்துவமனையில் உடனடியாக சேர்த்ததால் உயிர் பிழைத்தனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+