கன்டெய்னர் லாரிகளில் புதிய ரூ.500 நோட்டுக்கள் சென்னை வந்தன.. சில்லரை தட்டுப்பாடு நீங்குமா?
ரூ.500 நோட்டுக்கள் அடங்கிய கன்டெய்னர் சென்னை வந்துள்ளதால் இனிமேல் நோட்டு தட்டுப்பாடு நீங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை: புதிய ரூ.500 நோட்டுக்கள் 2 கண்டெய்னர் லாரிகள் மூலம் சென்னை வந்துள்ளன.
இந்தியாவில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மக்களிடம் இருந்த பழைய நோட்டுகளை மாற்றித்தருவதற்காக ரிசர்வ் வங்கி தனது அனைத்து அலுவலகங்களுக்கும் புதிய 2 ஆயிரம் ரூபாய் மற்றும் 100 ரூபாய் நோட்டுகளை அனுப்பியது.

தமிழகத்துக்கு 270 பெட்டிகளில் பெட்டிக்கு ரூ.20 கோடி வீதம் ரூ.5 ஆயிரத்து 400 கோடி அனுப்பப்பட்டது. இந்த பணம் அனைத்து வங்கிகளுக்கும் அனுப்பப்பட்டு பொதுமக்களுக்கு வினியோகிக்கப்பட்டு வருகிறது. இதுவரை தமிழகத்துக்கு புதிய 500 ரூபாய் நோட்டுகள் வராமல் இருந்தது. இதனால் பணத்தட்டுப்பாடு மற்றும் சில்லரை தட்டுப்பாடு கடுமையாக நிலவியது.
கர்நாடக மாநிலம் மைசூர், மராட்டிய மாநிலம் நாசிக் ஆகிய இடங்களில் ரிசர்வ் வங்கி சார்பில் ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்படுகிறது. நாசிக்கில் உள்ள அச்சகத்தில் இருந்து முதல்கட்டமாக 50 லட்சம் புதிய 500 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு ரிசர்வ் வங்கியிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.
மைசூருவில் உள்ள ரிசர்வ் வங்கிக்கு சொந்தமான அச்சகத்தில் இருந்து 2 கன்டெய்னர் லாரிகளில் ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பில் புதிய 500 மற்றும் 2,000 ரூபாய் நோட்டுகள் சென்னைக்கு நேற்று பலத்த பாதுகாப்புடன் கொண்டுவரப்பட்டன. இதனை ரிசர்வ் வங்கி அதிகாரிகள் தமிழ்நாடு முழுவதும் உள்ள வங்கிகளுக்கு அனுப்புகின்றனர். இன்று முதல் புதிய 500 ரூபாய் நோட்டுகள் மக்களுக்கு வினியோகிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications