திமுக இப்தார் விழாவில் பங்கேற்க துபாயிலிருந்து 1 நாள் விசிட் அடித்த நிர்வாகி! என்ன பின்னணி?
சென்னை: திமுக இப்தார் விழாவில் பங்கேற்பதற்காக துபாயிலிருந்து சென்னைக்கு 1 நாள் விசிட் அடித்து கட்சித் தலைமையின் கவனம் ஈர்த்திருக்கிறார் அமீரக திமுக நிர்வாகி ஒருவர்.
நெல்லை மாவட்டத்தை சேர்ந்த எஸ்.எஸ்.மீரான் அமீரக திமுக பொறுப்பாளராக உள்ளார். அதுமட்டுமின்றி தமிழக அரசின் புலம்பெயர் தமிழர் நல வாரிய உறுப்பினராகவும் உள்ளார்.
இந்நிலையில் திமுக சார்பில் அக்கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் துறைமுகம் காஜா ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இப்தார் விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.

இதில் திமுகவில் உள்ள இஸ்லாமிய பிரமுகர்கள் அனைவரும் கலந்துகொண்டனர். அந்த வகையில் லண்டன் பைசல், துபாய் மீரான் உள்ளிட்ட வெளிநாடுகளில் உள்ள இஸ்லாமிய திமுக பிரமுகர்களுக்கும் அழைப்பிதழ் அனுப்பப்பட்டது.
முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்கும் விழாவில் கலந்துகொள்ள வேண்டி துபாயிலிருந்து காலை புறப்பட்டு சென்னை வந்தடைந்த அமீரக திமுக பொறுப்பாளர் எஸ்.எஸ்.மீரான் அன்றைய தினமே இரவோடு இரவாக மீண்டும் அடுத்த விமானத்தை பிடித்து துபாய் சென்றடைந்திருக்கிறார்.
ஸ்டாலின் முன்னிலையில் ஒன்றரை நிமிடம் நன்றியுறை ஆற்றுவதற்காகவே, இவர் இவ்வளவு தூரம் 1 நாள் விசிட்டில் வந்து சென்றது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே கடந்த வாரம் தான் துபாயில் அமீரக திமுக சார்பில் இப்தார் விழா நடத்தப்பட்டது. அதில் திமுக மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம். அப்துல்லா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
-
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த்












Click it and Unblock the Notifications