மோடி அரசு தமிழகத்துக்கு மிகப்பெரிய துரோகம் இழைத்திருக்கிறது - சுப.உதயகுமார்
சென்னை: பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான பா.ஜ.க. அரசு தமிழகத்துக்கும், தமிழினத்துக்கும் மிகப்பெரிய துரோகம் இழைத்திருக்கிறது என பச்சை தமிழகம் கட்சி தலைவர் சுப.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவரது பேஸ்புக்கில் பதிவு செய்துள்ளதாவது:
நரேந்திர மோடியின் தலைமையிலான பா.ஜ.க. அரசு தமிழகத்துக்கும், தமிழினத்துக்கும் மிகப்பெரிய துரோகம் இழைத்திருக்கிறது. உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டது போல காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்து தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கும் ஒரு பெரும் பிரச்சினைக்கு முற்றுப்புள்ள வைப்பதற்கு பதிலாக, வாரியம் இப்போது அமைக்க முடியாது என்று கைவிரித்திருக்கிறது. இது முழுக்க முழுக்க ஒரு தேச விரோத, சுயநலவாதச் செயல்.

தமிழர்களுக்கு நியாயம் கிடைப்பதைவிட, இந்தியாவின் ஒரு பெரும் பிரச்சினைக்கு சுமூகமான தீர்வு காண்பதை விட, இந்தியாவின் ஒருமைப்பாட்டை தக்கவைத்துக் கொள்வதைவிட எதிர்வரும் கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவது மோடிக்கும், காவிகளுக்கும் முக்கியமாகப்படுகிறது. இவர்கள் பேசும் தேசபக்திமிக்க இந்தியத் தேசியம் சந்தர்ப்பவாத தேர்தல் அரசியலாய் நாறிக் கொண்டிருக்கிறது.
குஜராத் பார்முலாவைக் கொண்டாடும் இவர்களிடம் இதற்கு மேலாக எதையும் எதிர்பார்க்க முடியாது, கூடாது. அத்தி பூத்தாற்போல ஓர் உச்சநீதிமன்றத் தீர்ப்பு நமக்கு உகந்ததாக வந்ததும், அது மோடி அரசால் முடக்கப்பட்டுவிட்டது. இனி கெஞ்சி, கூத்தாடி, கடிதம் எழுதி, நாடகமாடி, பேச்சுவார்த்தை நடத்தி கட்சிகள் அரசியல் செய்வார்கள். தமிழ் விவசாயி மீண்டும் துவங்கிய இடத்தில் வந்து நிற்பான்.
இன்னொரு பக்கம் தமிழர்கள் விரும்பாத கூடங்குளம் விரிவாக்கம், மீத்தேன், நியூட்டினோ, கெயில் என அனைத்து ஆபத்தானத் திட்டங்களும் அப்பட்டமாக நம் மீது திணிக்கப்படுகின்றன.

இந்த நிலையில் நாம் என்ன செய்யலாம்?
1. தமிழகம் முழுவதும் பா.ஜ.க. காங்கிரசுக்கு எதிராக பரப்புரை செய்வோம்.
2. தங்கள் மீதுள்ள வழக்குகளால் தில்லிக்காரர்களுக்கு பயந்து தமிழர்களைக் காட்டிக்கொடுக்கும் தீரா விடங்களை இனம் காண்போம், மக்களுக்கு எடுத்துரைப்போம்.
3.மத்திய அரசு, உச்சநீதிமன்றம் எல்லோருக்கும் ஒருபுறம் இருக்கட்டும், நமது வாழக்கை, தேவைகள், திட்டங்களை நாம் முடிவு செய்வோம். நடைமுறைப் படுத்துவேம். ஏற்க முடியாதவற்றை ஒன்றாய் நின்று எதிர்ப்போம். தமிழகத்தில் தமிழர்கள்தான் எஜமானர்கள் என்பதை நிலை நாட்டுவோம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
-
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்!











Click it and Unblock the Notifications