''டாடி, எனக்கொரு டவுட்டு!''... இடிந்தகரையிலிருந்து இடித்துக் கேட்கும் உதயகுமார்!
இடிந்தகரை: ஆம் ஆத்மி கட்சியின் கன்னியாகுமரி தொகுதி வேட்பாளர் உதயகுமார் டாடி எனக்கொரு டவுட்டு என்ற தலைப்பில் முதல்வர் ஜெயலலிதா, விஜயகாந்த், மு.க.ஸ்டாலின் ஆகியோரிடம் சில கேள்விகளைக் கேட்டுள்ளார்.
இடிந்தகரையிலிருந்து தனது போராட்டத்தை மட்டுமல்லாமல், தேர்தல் பிரசாரத்தையும் முனைப்புடன் மேற்கொண்டு வருகிறார் உதயகுமார். இவர் ஆம் ஆத்மி சார்பில் குமரியில் போட்டியிடுகிறார். இவரது தோழர்கள் இருவரும் தூத்துக்குடி மற்றும் நெல்லையில் போட்டியிடுகின்றனர்.
இந்த நிலையில் டாடி எனக்கொரு டவுட்டு என்ற தலைப்பில் தனது பேஸ்புக் பக்கத்தில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சில கேள்விகளையும், சந்தேகங்களையும் விடுத்துள்ளார் உதயகுமார்.
அவை...

தாது மணற் கொள்ளை.. வாய் திறக்கவில்லை
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் அண்மையில் தேர்தல் பிரச்சாரம் செய்த தமிழக முதல்வர் செல்வி. ஜெயலலிதா, எதிர்கட்சித் தலைவர் திரு. விஜயகாந்த், தி.மு.க. பொருளாளர் திரு. ஸ்டாலின் யாருமே கூடங்குளம், தாதுமணற் கொள்ளை பற்றியெல்லாம் வாயே திறக்கவில்லையே, ஏன்?

கூடங்குளம் மின்சாரம்... மூச்சு விடவில்லை
ஓரிரண்டு நாட்களுக்கு முன் சங்கரன்கோவிலில் தமிழக மின்தட்டுப்பாடு பிரச்சினை பற்றி விளக்கமாகப் பேசிய முதல்வர், கூடங்குளம் மின்சாரம் பற்றி மூச்சு விடவில்லையே, ஏன்?

நான்கு மணி நேரம் மின்வெட்டு ஏன்
கூடங்குளம் அணுமின் நிலையம் சூப்பராக வேலை செய்கிறதென்றால், தெருவெங்கும் மின்சாரம் பாய்ந்தோடுகிறதென்றால், தமிழகத்தில் நான்கு மணி நேரம் மின்வெட்டு நடக்கிறதே, ஏன்?

கூவிக் கூவி விற்பனை செய்ய
கூடங்குளம் அணுமின் நிலையம் வெற்றி பெற்றுவிட்டது என்றால், கூடங்குளம் திட்டத்தை நாட்டுக்கு அர்ப்பணித்து, காங்கிரசு வேட்பாளர்களை எல்லாம் கூவிக்கூவி விற்பனை செய்ய கேட்டுக்கொள்ளவில்லையே, ஏன்? என்று கேட்டுள்ளார் உதயகுமார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications