நான் நேர்மையானவன்... பணம் வாங்கிக் கொண்டு போராடவில்லை!- கூடங்குளம் உதயகுமார்
கூடங்குளம்: அணு உலைக்கு எதிரானப் போராட்டத்திற்கு அமெரிக்காவில் இருந்து நிதி வழங்கப்பட்டதாக மத்திய உளவுத்துறை தெரிவித்துள்ள குற்றச்சாட்டை மறுத்துள்ள உதயகுமார், தான் நேர்மையானவர் என விளக்கமளித்துள்ளார்.
அண்மையில் உளவு அமைப்பான ஐ.பி, பிரதமர் அலுவலகத்துக்கு என்.ஜி.ஓ.க்களின் செயல்பாடுகள் குறித்து ஒரு அறிக்கை அனுப்பியிருந்தது. அதில் கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டக் குழுவைச் சேர்ந்த உதயகுமார் பெயரைக் குறிப்பிட்டு அமெரிக்காவிடம் இருந்து அவர் பணம் பெற்றதாக குற்றம் சாட்டியிருந்தது. இதனால், பணம் பெற்றுக் கொண்டு தான் உதயகுமார் கூடங்குளம் போராட்டத்தில் ஈடுபட்டாரா என சர்ச்சை உண்டானது.
மேலும், இந்தியாவின் வளர்ச்சியைக் குலைக்கும் வகையில் இந்தியாவில் சுமார் 65 அரசு சாரா அமைப்புகளுக்கு மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் நிதியுதவி செய்வதாகவும் உளவுத் துறை தெரிவித்துள்ளது. மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த புகார்கள் தொடர்பாக விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு போராட்ட குழு கூட்டமைப்பு தலைவர் ஆன்டன் கோமஸ், ‘3 ஆண்டுகளாக உதயகுமார் இடிந்தகரையில் இருந்த போது மக்கள் பணத்தை தான் போராட்டத்துக்கு செலவு செய்துள்ளோம். அமெரிக்காவில் இருந்து அவருக்கு பணம் வந்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டு அவரது தனிப்பட்ட பிரச்சினை. அதில் தவறு இருந்தால் அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம்' எனத் தெரிவித்தார்.
இந்நிலையில், மத்திய உளவுத் துறையின் அறிக்கையில் தனது பெயர் இடம்பெற்றிருப்பது குறித்து விளக்கமளித்துள்ளார் உதயகுமார்.
இந்திய உளவுத் துறை அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சமூக ஆர்வலர்கள் நேற்று செய்தியாளர்களை சந்தித்தனர். அந்த செய்தியாளர்கள் சந்திப்பில் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் இடிந்தகரையில் இருந்தபடி கலந்து கொண்டார் உதயகுமார்.
அப்போது அவர் கூறியதாவது:

ஆய்வு கட்டுரைகள் மட்டும்...
அமெரிக்காவின் ஓஹியோ மாகாண பல்கலைக்கழகத்தின் கிர்வான் இன, நிற ஆய்வு நிறுவனத்துக்காக இந்தியாவில் இருந்தபடி நான் ஆய்வுக்கட்டுரைகள் எழுதினேன்.

ஆய்வு மேற்கொள்ளவில்லை...
உலகமயமாக்கல், இன வேறுபாடுகள், சிறுபான்மை அரசியல், பிரிக்ஸ் அமைப்பு போன்ற தலைப்புகளில் கட்டுரை எழுதினேன். ஆனால், அணுசக்தி பற்றியோ, வளர்ச்சித் திட்டங்கள் தொடர்பாகவோ நான் எந்த ஆய்வையும் மேற்கொள்ளவில்லை.

நேர்மையானவன்...
நான் நேர்மையானவன். வெளிநாடுகளில் இருந்து பணம் வாங்கிக் கொண்டு போராடவில்லை என்பதை பலமுறை தெளிவுபடுத்தி விட்டேன்.

சட்டப்படி நடவடிக்கை...
இது பற்றி சட்ட நடவடிக்கை எடுப்பேன். உளவுத் துறையின் அறிக்கையால் எனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது''என்றார் உதய குமார்.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications