கருணாநிதி, ஜெயலலிதா முதல் உதயகுமார்வரை.. தமிழகத்தில் பெருகிவிட்ட முதல்வர் வேட்பாளர்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலில் இந்தாண்டு முதல்வர் வேட்பாளர்களின் எண்ணிக்கை சற்று அதிகமாகவே இருக்கும் போல் தெரிகிறது. நாளுக்கு நாள் முதல்வர் வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

போகிற போக்கைப் பார்த்தால் கட்சிகளின் வேட்பாளர்களை விட முதல்வர் வேட்பாளர்கள் அதிகமாக இருப்பார்கள் போலத் தெரிகிறது.

தமிழகத்தில் இன்னும் ஓரிரு மாதங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான பணிகளை அதிமுக, திமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் தொடங்கியுள்ளன. இக்கட்சிகள் தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்களிடம் விருப்பமனுக்களை வாங்குவதற்கு அறிவிப்புக்களையும் வெளியிட்டு விட்டன.

விருப்ப மனுக் கட்டணம்...

விருப்ப மனுக் கட்டணம்...

தேர்தலில் போட்டியிட விருப்பமுள்ளவர்களிடமிருந்து பெறப்படும் கட்டணங்களில் அதிமுக குறைந்த கட்டணத்தையும், திமுக அதிக கட்டணத்தையும் நிர்ணயம் செய்துள்ளது .இது திமுகவினரிடையே கொஞ்சம் தயக்கத்தை ஏற்ப்படுத்தினாலும் இளையவர்கள் அதிகம் பேர் விண்ணப்பம் செய்வார்கள் என்பதையே கருத்தில் கொண்டு இந்த அறிவிப்பு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அமைதி காட்கும் கட்சிகள்...

அமைதி காட்கும் கட்சிகள்...

இந்நிலையில் காங்கிரஸ், பாஜக, மதிமுக, கம்யூ, விசி உள்ளிட்ட கட்சிகளின் சார்பிலும், தேமுதிக சார்பிலும் இன்னும் விருப்ப விண்ணப்ப மனுக் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.

அடுத்த முதல்வர்...

அடுத்த முதல்வர்...

இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த முதல்வர் யார் என்பதை மக்கள் முடிவு செய்யும் முன்பே சில கட்சியினர் தாங்களாகவே 2016 முதல்வர் இவர்தான், அவர் தான் என முகநூல் முதல் முதல்பக்கம் செய்தித்தாள் வரை விளம்பரம் செய்ய தயாராகிவிட்டனர்.

அதிமுக, பாமக...

அதிமுக, பாமக...

அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் தற்போதைய ஜெயலலிதாதான் என்பது அனைவரும் அறிந்ததுதான். பாட்டாளி மக்கள் கட்சி தங்கள் கட்சியின் முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் என்பதை எற்கனவே அறிவித்து மாவட்டங்கள் தோறும் மாநாட்டுக்களைநடத்தி வருகின்றனர்.

ஸ்டாலின்...

ஸ்டாலின்...

திமுக தரப்போ இன்னும் யார் முதல்வர் வேட்பாளர் என்பதை சொல்லவில்லை இருந்தாலும் ஒருபுறம் ஸ்டாலின் தான் அடுத்த முதல்வர் என்று வர்ணனை செய்து அக்கட்சியினர் ஆங்காங்கே விளம்பரங்களையும்,கட் அவுட் களையும் வைத்து கலக்கி வருகின்றனர்.

கருணாநிதி...

கருணாநிதி...

மற்றொரு புறமோ மீண்டும் கருணாநிதியை முதல்வராக்கி அழகு பார்க்க வேண்டும் என அக்கட்சித் தொண்டர்கள் தீயாக வேலை பார்த்து வருகின்றனர்.

விஜயகாந்த்...

விஜயகாந்த்...

தேமுதிக தொண்டர்களோ அடுத்த முதல்வர் விஜயகாந்த் தான் என கூறி வருகின்றனர். இதனை முன்னிருத்தியே அவர்கள் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

பச்சை தமிழகம்...

பச்சை தமிழகம்...

இந்நிலையில் கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர் உதயகுமார் ‘பச்சை தமிழகம்' என்று பெயரிடப்பட்டுள்ள புதிய அரசியல் கட்சி ஒன்றை தொடங்கியுள்ளார். இக்கட்சி தொடங்கி சில நாட்களே ஆகியுள்ளது.

உதயகுமார் தான்...

உதயகுமார் தான்...

ஆனால் அவர்கள் கட்சியின் முத்திரை பதித்த முகநூல் கணக்கில் உதயகுமார் 2016-ல் முதல்வர் https://web.facebook.com/CM-Udayakumar-TN-2016-572569822891019/ என்று பதிவு செய்யப்பட்டு தற்போது சுமார் 740 பார்வையாளர்களோடு சுற்றி வருகிறது.

சகாயம்...

சகாயம்...

இதுதவிர சகாயத்தை அடுத்த முதல்வராக்குவது என்ற கொள்கையோடு ஒரு கூட்டம் செயல்பட்டு வருகிறது. இதில் சகாயத்தின் ஆதரவாளர்களைச் சேர்க்கும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது.

தேர்தல் திருவிழா...

தேர்தல் திருவிழா...

இப்படியே போனால் இன்னும் தேர்தலுக்கு நாட்கள் நிறைய உள்ளது, அதற்குள் இன்னும் யார் யாரெல்லாம் முதல்வர் வேட்பாளர்களாக வரப் போகிறார்களோ தெரியவில்லை. விதவிதமான முதல்வர் வேட்பாளர்களோடு இந்தத் தேர்தல் களை கட்டும் என்பதில் மட்டும் சந்தேகமேயில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+