உங்கள் சந்தேகங்களுக்கு விளக்கம் வேண்டுமா.. அலுவலகம் வரவும்.. எச்.ராஜாவுக்கு ஜெ.அன்பழகன் அழைப்பு!
சென்னை: உதயநிதி என்பது தமிழ் பெயர்தான் என்று திமுக எம்எல்ஏவும், அக்கட்சியின் சென்னை மேற்கு மாவட்ட செயலாளருமான ஜெ.அன்பழகன் பாஜக தேசிய பொதுச்செயலாளர் எச்.ராஜாவுக்கு பதில் அளித்துள்ளார்.
உதயநிதி என்பது தமிழ் பெயர் இல்லை என்று எச்.ராஜா கிண்டல் செய்திருந்தார். இதுகுறித்து நிருபர்கள் கேள்விக்கு அன்பழகன் பதிலளித்து கூறுகையில், உதயம் என்றால் உதிப்பது, நிதி என்றால் அர்த்தம் உங்களுக்கே தெரியும்.

எனவே, உதயநிதி என்பது தமிழ் பெயர் தான் என கூறியிருந்தார். இந்த பேட்டி வீடியோவை தனது டிவிட்டர் கணக்கில் ஷேர் செய்துள்ள அன்பழகன், "இன்னும் தெளிவான விளக்கம் வேணுமா @HRajaBJP சார்? உங்களின் எல்லா சந்தேகத்துக்கும் விடை உள்ளது... அலுவலகம் வரவும்..." என குறிப்பிட்டுள்ளார்.
உதயநிதி என்பது தமிழ் பெயர் தான்...@Udhaystalin
— J Anbazhagan (@JAnbazhagan) January 30, 2018
இன்னும் தெளிவான விளக்கம் வேணுமா @HRajaBJP சார்? உங்களின் எல்லா சந்தேகத்துக்கும் விடை உள்ளது... அலுவலகம் வரவும்... 🙏🏻 pic.twitter.com/aWendQLrZo
அலுவலகம் வரவும் என்ற ஜெ.அன்பழகன் டிவிட்டை பார்த்த சில நெட்டிசன்கள், சிவாஜி திரைப்படத்தில் ரஜினிகாந்த் கதாப்பாத்திரம், ஆபீஸ் ரூமிற்குள் வரச் சொல்லும் மீம்களை போட்டு தெறிக்கவிடுகிறார்கள்.
Oh office room ah pic.twitter.com/IghgosdpvX
— G Sham (@shamganesh) January 30, 2018
உதயநிதி ஸ்டாலின், அரசியலில் களமிறங்க நேரம் வந்துவிட்டதாக அறிவித்த நிலையில், எச்.ராஜா இதுபோன்ற விமர்சனத்தை முன் வைத்திருந்தார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications