தீவிர அரசியலில் குதிக்கும் உதயநிதி ஸ்டாலின்... எந்த தொகுதியில் போட்டி?
சட்டசபை தேர்தலில் எந்த தொகுதியில் போட்டியிடுவது என்பது குறித்து உதயநிதி ஸ்டாலின் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
Recommended Video

சென்னை: தீவிர அரசியலில் குதித்துள்ள உதயநிதி ஸ்டாலின் எந்த தொகுதியில் போட்டியிடுவார் என்பதுதான் திமுகவின் ஹாட் டாபிக்காக விவாதிக்கப்பட்டு வருகிறது.
திமுக செயல் தலைவர் ஸ்டாலின் மகன் உதயநிதி, தீவிர அரசியலில் குதித்துள்ளார். இதனையடுத்து திமுக இளைஞர் அணி பொறுப்பு அவருக்கு வழங்கப்படலாம் எனவும் கூறப்பட்டு வருகிறது.

திருச்சியும் ரெடி
இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின், சட்டசபை தேர்தலில் எந்த தொகுதியில் போட்டியிடுவார் என்பது குறித்து திமுகவினர் தீவிரமாக விவாதித்து வருகின்றனர். திருச்சி மாவட்ட தொகுதி ஒன்றில் உதயநிதியை நிறுத்துவதற்கான வேலைகளை அவரது நண்பர்கள் வட்டாரம் மேற்கொண்டு வருகிறது.

கொளத்தூரில் போட்டி?
இருந்தபோதும் தாத்தா கருணாநிதியின் சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியைத்தான் உதயநிதி விரும்புவதாகவும் கூறப்படுகிறது. அதேநேரத்தில் அப்பா ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியை தேர்வு செய்வது குறித்தும் உதயநிதி தரப்பு விவாதித்து வருகிறதாம்.

திருவாரூரில் ஸ்டாலின் போட்டி?
ஸ்டாலினைப் பொறுத்தவரையில் வரும் தேர்தலில் திருவாரூர் தொகுதியில் போட்டியிட திட்டமிட்டுள்ளாராம். இதற்கான வேலைகள் இப்போதே முடுக்கிவிடப்பட்டுள்ளதாம்.

திமுகவினர் எதிர்பார்ப்பு
அப்படி ஸ்டாலின் திருவாரூர் தொகுதிக்கு ஷிப்ட் ஆனால் கொளத்தூரில் போட்டியிடலாம் என்பது உதயநிதியின் திட்டமாம். இதனால் திருச்சி, திருவாரூர், சென்னை திமுகவினர் பெரும் ஆர்வத்தில் உள்ளனர் என்கின்றன அறிவாலய வட்டாரங்கள்.












Click it and Unblock the Notifications