விஜய் கண் முன்னே.. தரமான சம்பவம் செய்த உதயநிதி.. கடுமையாக தாக்கிட்டாரே.. இனி இப்படித்தான் போல
சென்னை: தமிழ்நாடு சட்டசபையில் இன்று எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சட்டசபையில் கடுமையாக பேசி உள்ளார். விஜய் தலைமையிலான தவெக அரசு மீது மிக கடுமையான விமர்சனங்களை அவர் முன் வைத்தார்.
தமிழ்நாடு சட்டசபையில் நம்பிக்கை கோரும் தீர்மானம் மீதான விவாதத்தில் பேசிய எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை மக்கள் உங்களுக்கு வாக்களிக்கவில்லை. 4.93 கோடி வாக்குகளில் 1.72 கோடி தான் ஆளுங்கட்சி பெற்றுள்ளது. மீதமுள்ள 3.21 கோடி பேர் உங்களுக்கு எதிராக வாக்களித்துள்ளனர்.

65% மக்களால் நிராகரிக்கப்பட்ட இந்த ஆட்சி மீது எங்களுக்கு மட்டுமல்ல உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கே கொஞ்சம் கொஞ்சமாக நம்பிக்கை குறைந்து வருகிறது. திமுகவின் திட்டங்களில் அரசியல் செய்ய வேண்டாம். இந்த மாதம் 15 ஆம் தேதி உரிமைத் தொகைக்காக மகளிர் காத்துக் கொண்டிருக்கின்றனர். கடந்த 7ம் தேதி செல்ல வேண்டிய.. தமிழ் புதல்வன் திட்டம், புதுமைப்பெண் திட்டத்திற்கான தொகைகள் செல்லவில்லை.. முக்கியமாக காலை உணவு திட்டம் அடுத்த மாதம் மீண்டும் தொடங்கப்பட வேண்டும். நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
இந்த ஆட்சி இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் ஆட்சியாக இருக்க கூடாது; த.வெ.க ஆட்சியை தொடர தி.மு.க தடையாக இருக்காது. திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி கூட தெரிவிக்காமல், ராஜினாமா செய்துள்ளார் மாண்புமிகு முதலமைச்சர் விஜய். ஒரு தொகுதியில் நிற்க தைரியம் இன்றி இரண்டு தொகுதியில் நின்றுள்ளார்.
நாங்கள் வெளிநடப்பு செய்த பிறகு எண்ணிக்கை குறைந்து நீங்கள் வாக்கெடுப்பில் வெற்றி பெறத்தான் போகிறீர்கள். அதன் பிறகாவது மக்களின் நம்பிக்கையை காப்பாற்றும் விதமாக செயல்படுங்கள்.
அதிமுக பிளவு பட்டுள்ளது. அதில் ஒரு பிரிவினர் உங்களுக்கு ஆதரவு தெரிவித்தார்கள். அதற்குப் பிறகு நடந்துதான் ட்விஸ்ட். அந்த பிரிவில் ஒருவரது வீட்டிற்கு புதிய சோஃபா செல்கிறது. பின்னாலேயே புதிய முதலமைச்சரும் போறாரு. புஷ்பா பட பாணியில் ஆட்சி நடைபெற்று வருகிறது. உங்களுக்கு CHANGE வரும் என்று மக்கள் வாக்களித்தனர். ஆனால் CHANGE-க்கு பின் மிகப்பெரிய EXCHANGE இருக்கும் என மக்கள் நினைக்கின்றனர்.. ஏற்கெனவே திமுக தலைவர் சொன்னதுபோல உங்கள் ஆட்சி தொடர நாங்கள் இடையூறாக இருக்க மாட்டோம் என்று சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடுமையாக பேசி உள்ளார்.
-
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.. சென்னைக்கு ஆதவ் அர்ஜுனா.. முதல்வர் விஜய் மேஜர் உத்தரவு -
உடனே வாங்க.. அதிகாரிகளை மீட்டிங் ரூமிற்கு அழைத்த விஜய்.. துளைச்சு எடுத்துட்டாரே.. வாத்தி ரெய்டு! -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
டிகே.சிவகுமார் என்ட்ரி.. விஜய் கொடுத்த பலம்.. அசைக்க முடியாத CBN.. வரலாற்று சம்பவம் மக்களே! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
மகள் கல்யாணத்திற்காக முதல்வர் விஜய்யை சந்தித்த குஷ்பு குடும்பம்.. வெளியே வந்ததும் உருக்கமான பதிவு -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
சிங்கம் ஒன்று புறப்பட்டதே.. அண்ணாமலைக்கு ஷிப்ட் ஆன ரஜினிகாந்த் ரசிகர்கள்.. தவெக இதை எதிர்பார்க்கல -
டிடிவி தினகரன் பார்வை படாதா என பம்மியது மறந்து போச்சா? அமைச்சர் CTR நிர்மல்குமாருக்கு அமமுக பதிலடி -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்!












Click it and Unblock the Notifications