உலகம் காணாத தலைமை... ‘வஞ்சப்புகழ்ச்சி’யில் ஜெ.க்கு ஹேப்பி பர்த்டே சொன்ன உதயநிதி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளுக்கு திமுக தலைவர் கருணாநிதியின் பேரனும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் வித்தியாசமான முறையில் டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கடந்த புதனன்று தமிழக முதல்வர் ஜெயலலிதா தனது 68வது பிறந்தநாளைக் கொண்டாடினார். அவரது பிறந்தநாளை அமைச்சர், கட்சித் தொண்டர்கள் ஆகியோர் கோலாகலமாக கொண்டாடினர்.

விரைவில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ள, திமுக உள்ளிட்ட சில கட்சிகள் தவிர அதிமுகவோடு கூட்டணிக் கனவில் உள்ள கட்சித் தலைவர்களும் ஜெயலலிதாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறினர்.

உதயநிதி வாழ்த்து...

உதயநிதி வாழ்த்து...

இந்நிலையில், திமுக தலைவர் கருணாநிதியின் பேரனும், திமுக பொருளாளர் ஸ்டாலினின் மகனும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் ஜெயலலிதாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக் கவிதை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

வஞ்சப்புகழ்ச்சி...

வஞ்சப்புகழ்ச்சி...

ஒருவரைப் புகழ்வது போல் இகழ்வது என்ற வஞ்சப்புகழ்ச்சி அணியில் உள்ளது இந்தக் கவிதை. 'உலகம் காணாத தலைமை வாழ்த்துவதில் எத்தனை பெருமை' என அந்த கவிதைக்கு அவர் தலைப்பிட்டுள்ளார்.

இரும்பு இதயமே...

இரும்பு இதயமே...

அந்தக் கவிதையில், ‘இடி விழுந்தாலும் அணை உடைந்தாலும் இம்மியளவும் துயர்கொள்ளாத இரும்பு இதயமே' என கடந்தாண்டு இறுதியில் தமிழகம் சந்தித்த வெள்ளத்தை மறைமுகமாகச் சுட்டிக் காட்டியுள்ளார் உதயநிதி.

நூதனப் பிரச்சாரம்...

நூதனப் பிரச்சாரம்...

இம்முறை சட்டசபைத் தேர்தலில் சமூகவலைதளங்களிலும் நூதனமான பிரச்சாரம் செய்யத் தொடங்கியுள்ளன கட்சிகள். அந்தவகையில் கடந்த சில நாட்களாக திமுக ஊடகங்களில் அதிமுக அரசை விமர்சித்து வித்தியாசமான விளம்பரங்கள் அளித்து வருகிறது. அதற்கு அதிமுகவும் பதிலடி கொடுத்து வருகிறது.

வாழ்த்துக்கவிதை...

வாழ்த்துக்கவிதை...

இந்தச் சூழ்நிலையில் அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக் கூறுவது போல், வஞ்சப்புகழ்ச்சியில் உதயநிதி வெளியிட்டுள்ள கவிதை இணையத்தில் வைரலாகியுள்ளது.

69வது பிறந்தநாள்...

உதயநிதி வெளியிட்டுள்ள இந்தக் கவிதை புகைப்படத்தில் முக்கிய விசயம் ஒன்று உள்ளது. அதாவது சமீபத்தில் தனக்கு 69 வயதாகப் போவதாகக் குறிப்பிட்டிருந்தார் ஜெயலலிதா. ஆனால், கட்சியினரோ 68வது பிறந்தநாள் என்று கூறியே கொண்டாடினர். அதிமுகவினரே இப்படி 68 எனக் குறிப்பிட்டுள்ள நிலையில், உதயநிதி சரியாக 69வது பிறந்தநாள் எனக் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+