மதுரை வானில் ஏலியன்ஸின் “பறக்கும் தட்டு”?- விண்ணில் பறந்த மர்மப் பொருளால் பரபரப்பு
மதுரை: மதுரையில் வானில் பறந்த மர்மான எரிந்த பொருள் ஒன்றால் யூ.எப்.ஓ, ஏலியன்ஸ் என்று பொது மக்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே வானில் திடீரென்று வட்டவடிவிலான பொருள் ஒன்று வானில் பறந்துள்ளது. இது செய்தியாளர் ஒருவருடைய கண்களிலும், பொதுமக்களுக்கும் நன்கு தெரிந்துள்ளது.

இதனையடுத்து கொழுந்துவிட்டு எரியும் தீப் பந்தம் போன்று 4 இடங்களில் பறந்த அந்த மர்மப் பொருள் 4 நிமிடங்கள் வானில் காட்சியளித்தது. இதனை அச்செய்தியாளர் படம்பிடித்துள்ளார். பறக்கும் தட்டு போன்று அந்த பொருள் காட்சியளித்துள்ளதால் வேற்று கிரகவாசிகள் பறக்கும் தட்டில் வந்தார்களாக என்று பொதுமக்கள் பரபரப்பாக பேசிக்கொண்டனர்.
இந்த காட்சியை பார்த்த 100க்கும் மேற்பட்ட மக்கள் இந்த தகவலை தங்களது உறவினர்களுடனும், நண்பர்களுடனும் திகிலுடனும், அதிசயத்துடனும் பகிர்ந்துகொண்டனர். எனினும், இதுகுறித்த விசாரணையில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இதனால் திருமங்கலம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
உண்மையில் பறக்கும் தட்டு என்று எதுவுமே கிடையாது. மேலைநாடுகளில், பறக்கும் தட்டு பற்றிய செய்திகள் அடிக்கடி பத்திரிகைகளில் வெளிவருவதுண்டு. நம் நாட்டிலும் கூட அப்படிப்பட்ட செய்திகள் திடீரென வெளியாகும்.
வானில் இப்படி பறக்கும் தட்டு போன்று தென்படுகின்ற பொருள், காஸ்மிக் கதிர் ஆய்வு, வானிலை ஆய்வு ஆகியவற்றுக்காக உயரே செலுத்தப்படும் பலூன்களாக இருக்கக்கூடும். மிக உயரத்தில் இருக்கின்ற இவற்றின் மீது ஒளி படும்போது, பறக்கும் தட்டு போன்று தோன்றும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications