For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டிற்கு ஐநா மனித உரிமை வல்லுநர்கள் கண்டனம்!

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டிற்கு ஐநா மனித உரிமை வல்லுநர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Google Oneindia Tamil News

Recommended Video

    துப்பாக்கிச்சூட்டிற்கு ஐநா மனித உரிமை வல்லுநர்கள் கண்டனம்!- வீடியோ

    தூத்துக்குடி: தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டிற்கு ஐநா மனித உரிமை வல்லுநர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    தூத்துக்குடியில் கடந்த மாதம் 22ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அப்பகுதி மக்கள் 100வது நாள் போராட்டம் நடத்தினர்.

    அந்த போராட்டத்தில் திடீரென வன்முறை வெடித்ததது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சூறையாடப்பட்டது. அங்கிருந்த வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது.

    துப்பாக்கிச்சூடு

    துப்பாக்கிச்சூடு

    ஸ்டெர்லைட் குடியிருப்புகளும் சூறையாடப்பட்டு தீ வைத்து கொளுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து போலீசார் போராட்டம் நடத்தியவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

    13 பேர் பலி

    13 பேர் பலி

    இதில் 17 வயது பள்ளி மாணவி உட்பட 13 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

    நேரில் ஆறுதல்

    நேரில் ஆறுதல்

    இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அரசியல் கட்சியினர் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர்.

    மனித உரிமை வல்லுநர்கள் கண்டனம்

    மனித உரிமை வல்லுநர்கள் கண்டனம்

    இந்நிலையில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு ஐ.நா மனித உரிமை வல்லுநர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். மனித உரிமை, சுற்றுச்சூழலுக்காக போராடியவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடைபெற்றுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளனர்.

    வெளிப்படையான விசாரணை

    வெளிப்படையான விசாரணை

    துப்பாக்கிச்சூடு குறித்து சுதந்திரமான, வெளிப்படையான விசாரணையை காலதாமதமின்றி நடத்தவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    English summary
    UN human rights experts have condemned the Tuticorin gunfire incident. They have accused that gun fire used on the people protesting human rights and environmental.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X