எதுக்கு ட்ரம்ப் இந்த வேண்டாத வேலை? அசிங்கப்பட்டாரு அமெக்க அதிபர்!
தேசிய கொடியை தவறாக வரைந்த ட்ரம்புக்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது
அமெரிக்கா: மதிப்பும், மரியாதையும், அரிய வாய்ப்பாக கிடைச்சிருக்கிற அதிபர் பதவியை ஒழுங்கா கவனிப்பதைவிட்டு விட்டு ட்ரம்ப்புக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலையெல்லாம்? அதுவும் சின்ன பசங்க கிட்ட எக்குத்தப்பாக மாட்டிக் கொண்டு ரொம்பவே அசிங்கப்பட்டு கொண்டிருக்கிறார்.
விஷயம் இதுதான். கொலம்பஸ் நகரில் ஒரு குழந்தைகள் நல மருத்துவமனை உள்ளது. அங்கு டொனால்ட் டிரம்ப் தமது மனைவியை கூட்டிக் கொண்டு சென்றிருக்கிறார். அங்கு சிகிச்சை பெறும் குழந்தைகளிடம் நலம் விசாரித்துக் கொண்டே வந்தார்.

கலர் பென்சில்கள்
பிறகு மருத்துவமனையிலேயே இருந்த நல மையத்திற்கு சென்றார். அங்கு குழந்தைகள் தங்களுக்கு பிடித்தமான படங்களை வரைந்து கொண்டும் அந்த படங்களுக்கு கலர் கலர் பென்சில்களை கொண்டு அழகுபடுத்தி கொண்டும் இருந்தனர். அதை பார்த்த ட்ரம்ப் சும்மா வேடிக்கை பார்த்துட்டு போயிருந்தால் பிரச்சனையே இல்லை.

கலர் அடித்த ட்ரம்
குழந்தைகள் அழகழகாய் படம் வரைவதை பார்த்ததும் ட்ரம்ப்புக்கும் படம் வரைய ஆசை வந்துவிட்டது. அப்போது ஒரு குழந்தை அமெரிக்க தேசிய கொடியை வரைந்திருந்தது. திடீரென்று குழந்தைகள் மத்தியில் உட்கார்ந்து கொண்ட ட்ரம்ப் அந்த தேசிய கொடிக்கு கலர் அடித்து தருகிறேன் என்று வாங்கி தப்பான கலரை அடித்து விட்டார்.

அதிபரே தவறு செய்யலாமா?
அமெரிக்க கொடி பொதுவாக, இடது மூலையில், நீல சதுரத்தில் வெள்ளை நிற நட்சத்திரங்களையும், 13 சிவப்பு மற்றும் வெள்ளை கோடுகளையும் கொண்டது. ஆனால் டிரம்ப், சிவப்பு, வெள்ளை கோடுகளுக்கு பதில் நீல வண்ண கோடுகளை வரைந்து விட்டார். ஒரு அதிபரே இப்படி தனது நாட்டின் கொடியை தவறாக வரைந்து சமாச்சாராம்தான் உலகமெங்கும் பத்திக்கிச்சு.
|
விமர்சகர்கள் கண்டனம்
நாடு முழுவதும் அவருக்கு ஒரே கண்டனக்குரல்கள்தான்! இப்படி இரண்டு நாளுக்கு ஒருமுறை அவரது நாட்டு மக்கள்கிட்ட வாங்கிக்கட்டிக்கிறதே இவருக்கு வேலையாகிவிட்டது என அமெரிக்க விமர்சகர்களே தெரிவித்து வருகின்றனர். இதெல்லாம் உங்களுக்கு தேவையா அதிபரே?
-
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications