'ராம்நாத் கோவிந்த்ஜி'க்கு நிபந்தனையற்ற ஆதரவு... பாஜக பாணியில் பேசி பழகும் ஓபிஎஸ்!
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளரான ராம்நாத் கோவிந்த்ஜிக்கு நிபந்தனையற்ற ஆதரவு தருவதாக உறுதியளித்துள்ளதாக ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
சென்னை: ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ராம்நாத் கோவிந்துக்கு நிபந்தனையற்ற ஆதரவை தருவோம் என அதிமுக அம்மா அணி அவரிடம் உறுதியளித்திருப்பதாக மாஜி முதல்வர் ஓபிஎஸ் கூறினார். அத்துடன் பாஜகவினரைப் போல ராம்நாத் கோவிந்த்ஜி' என ஜி போட்டு ஓபிஎஸ் பேட்டியளித்தது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக சிதைந்து போய் கிடந்தாலும் பாஜகவை ஆதரிப்பதால் போட்டி போட்டு கொண்டு டெல்லிக்கு ஓடுகின்றன. ஜனாதிபதி தேர்தலில் ஓபிஎஸ், இபிஎஸ், தினகரன் என அனைவருமே பாஜகவின் ராம்நாத் கோவிந்தை ஆதரிக்கின்றனர்.

இந்நிலையில் சென்னையில் முகாமிட்டுள்ள ராம்நாத் கோவிந்த், அதிமுக கோஷ்டி எம்.எல்.ஏக்கள், எம்பிக்களை சந்தித்து பேசினார். இச்சந்திப்புகளைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார் ஓபிஎஸ்.
அப்போது, ராம்நாத் கோவிந்த்ஜியை அதிமுக அம்மா கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் இன்று சந்தித்தனர். இச்சந்திப்பின் போது அவருக்கு ஆதரவு தருவதாக உறுதியளித்துள்ளோம்.
எந்த ஒரு நிபந்தனையும் இல்லாத ஆதரவை அவருக்கு தருவதாக கூறியிருக்கிறோம் என்றார். இதுவரை பாஜகவினர்தான் 'ஜி' என அழைத்து வந்தனர்.
இப்போது பாஜகவினராகவே ஆகிவிட்ட ஓபிஎஸ்-ம் ஜி போட்டு அழைக்க தொடங்கியுள்ளார். பாஜகவின் முதல்வர் வேட்பாளரே ஓபிஎஸ்தான் எனக் கூறப்பட்டு வரும் நிலையில் அவரது 'ஜி' பேச்சு புதிய சலசலப்பை கிளப்பியுள்ளது.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications