இது உங்கள் அரசு... உங்களுக்கான அரசு... எடப்பாடி பழனிசாமி முன்வைக்கும் புதிய முழக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்று மூன்றாண்டுகள் நிறைவடைந்துவிட்ட நிலையில் இப்போது புதிய முழக்கம் ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

இது உங்கள் அரசு... உங்களுக்கான அரசு என்பது தான் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்வைத்துள்ள புதிய முழக்கமாகும். மூன்றாண்டு சாதனை மலர் மற்றும் அரசு விளம்பரங்களில் கூட இந்த முழக்கம் தான் இடம்பெற்றுள்ளது.

ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது ''மக்களால் நான் மக்களுக்காகவே நான்'' என்ற முழக்கம் முன்வைக்கப்பட்ட நிலையில், இப்போது அதையொட்டியே எடப்பாடியாருக்கும் வரிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

சாதனைமலர்

சாதனைமலர்

தமிழக முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்று மூன்றாண்டுகள் நிறைவடைந்துவிட்டன. இதனால் கடந்த மூன்றாண்டுகளில் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்ட பணிகள், நலத்திட்டங்கள், அறிவிப்புகள், உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய வகையில் தமிழக அரசின் செய்தித்துறை சார்பில் சாதனை மலர் ஒன்று நேற்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் எடப்பாடி பழனிசாமியின் மேடைப்பேச்சுகளில் இருந்து சில குறிப்புகள் மட்டும் தொகுக்கப்பட்டுள்ளது.

புதிய முழக்கம்

புதிய முழக்கம்

ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது கடந்த 2016 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக, ''மக்களால் நான் மக்களுக்காகவே நான்'' என்ற கோஷத்தை முன்வைத்தார். பிரச்சாரங்கள், விளம்பரங்களிலும் இந்த கோஷம் தான் இடம்பெறும். அந்தவகையில் முதலமைச்சர் எடபாடி பழனிசாமிக்காகவும் இப்போது புதிய கோஷம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அது ஜெயலலிதாவுக்கு எழுதப்பட்ட வரிகளை போலவே, ''உங்கள் அரசு உங்களுக்கான அரசு'' என உருவாக்கப்பட்டுள்ளது.

பரப்புரை

பரப்புரை

வரும் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒன்றே கால் ஆண்டு மட்டுமே உள்ளதால், இப்போதே அரசு சார்பில் பரப்புரை தொடங்கப்பட்டுள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் அதாவது 2016 முதல் அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் பற்றி இனி மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்வதற்கான பணிகளை தமிழக அரசின் செய்தி மற்றும் விளம்பரத்துறை மேற்கொண்டு வருகிறது. அதற்கான பணிகளை செய்திதுறையின் மூத்த அதிகாரி எழில் மேற்கொண்டு வருகிறார்.

அறிவுறுத்தல்

அறிவுறுத்தல்

இதேபோல் மாவட்டம் தோறும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் உள்ள மக்கள் தொடர்பு அதிகாரிகளுக்கும் சென்னையில் இருந்து இது தொடர்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. சட்டமன்ற தேர்தல் வருவதால் அரசின் பணிகள் பற்றி முழுமையாக அது குறித்த தகவல்கள் மக்களை சென்று சேரும் வகையில் செய்தித்துறை அதிகாரிகள் பணிகளை தொடங்கி கவனம் செலுத்த தொடங்கியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+