For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கருணாநிதி உடல்நிலை குறித்து இன்று நலம் விசாரிக்க வருகிறார் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி!

திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை குறித்து விசாரிக்க மத்திய அமைச்சர் நிதின் கட்கரி இன்று சென்னை வருகிறார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    கருணாநிதி உடல்நிலை குறித்து இன்று நலம் விசாரிக்க வருகிறார் நிதின் கட்கரி!

    சென்னை: திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை குறித்து விசாரிக்க மத்திய அமைச்சர் நிதின் கட்கரி இன்று சென்னை வருகிறார்.

    திமுக தலைவர் கருணாநிதி கடந்த 27ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலையில் அவ்வப்போது திடீர் நலிவு ஏற்பட்டதாக கூறப்பட்டது.

    Union Minister Nitin Gadkari today coming to Chennai Kauveri Hospital

    இதனால் திமுக தொண்டர்கள் கலக்கம் அடைந்தனர். ஆனால் மருத்துவர்களின் தொடர் சிகிச்சையால் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது.

    அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ள நிலையில் மருத்துவக் குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து அரசியல் கட்சியினர் தொடர்ந்து கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரிக்க காவேரி மருத்துவமனைக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

    இந்நிலையில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிக்க இன்று சென்னை வருகிறார். இன்று மாலை காவேரி மருத்துவமனைக்கு வரும் அவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிக்க உள்ளார்.

    English summary
    Union Minister Nitin Gadkari today coming to Chennai Kauveri Hospital to visit Karunanidhi. Karunanidhi has been admitted in Kauveri hospital for last 10 days.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X