‘செவாலியே’ சிவாஜிக்கு நிஜவாழ்வில் நடிக்கத் தெரியவில்லை: பொன்.ராதாகிருஷ்ணன்
சென்னை: திரையில் நடிக்கத் தெரிந்தது போல் நிஜவாழ்க்கையிலும் நடித்திருந்தால் சிவாஜி அரசியலிலும் ஜெயித்திருக்கலாம் எனத் தெரிவித்துள்ளார் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்.
நேற்று மாலை சிவாஜியின் 86வது பிறந்த நாள் விழா சென்னை மியூசிக் அகாடமியில் நடைபெற்றது. சிவாஜியின் மகன்களான ராம்குமார் மற்றும் பிரபு ஏற்பாடு செய்திருந்த இந்த விழாவில், பத்மபூஷண் பத்மா சுப்ரமணியன், பாடகி ஜமுனா ராணி, நடிகை விஜயகுமாரி, நடிகர்கள் வி.எஸ்.ராகவன், சி.ஆர். பார்த்திபன் ஆகியோருக்கு சிவாஜி கணேசன் நினைவு விருதுகளை வழங்கினார் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்.

அதனைத் தொடர்ந்து விழாவில் அவர் பேசியதாவது :-
நிஜவாழ்க்கையிலும்...
திரையில் நடிக்கத் தெரிந்தது போல் நிஜ வாழ்க்கையில் நடிக்கத் தெரிந்திருந்தால் அரசியலிலும் அவர் ஜெயித்திருக்கலாம்.
சிவாஜி என்ற பட்டத்தோடு...
ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் ஏற்படுகிற இன்ப துன்பங்களை திரைப்படம் மூலம் நடித்துக் காட்டியவர் சிவாஜி. நாடகங்கள் மூலம் நடித்துப் பாராட்டப்பட்டு ‘சிவாஜி' என்கிற பட்டத்தோடு சினிமாவுக்கு வந்தார்.
பாரதியை கண் முன் காட்டியவர்...
1952-ல் வெளிவந்த பராசக்தி என்கிற முதல் படத்திலேயே அவரது திறமையை வெளிப்படுத் தினார். வீரபாண்டிய கட்டபொம்மன் முதல், சுதந்திரப் போராட்டத் தியாகிகளான வ.உ.சிதம்பரனார், பாரதியார், பகத்சிங், திருப்பூர் குமரன் உள்ளிட்டோரை நாம் பார்த்த தில்லை. இவருடைய படத்தைப் பார்த்துதான் தெரிந்து கொண்டோம்.
சிறந்த வில்லன்...
சிறந்த கதாநாயகனாக மட்டு மல்ல, ரங்கூன் ராதா, திரும்பிப் பார் போன்ற படங்களில் சிறந்த வில்லனாகவும் கோலோச்சியவர் சிவாஜி.
நடிப்பு பல்கலைக்கழகம்...
அவரது உடலின் அனைத்து அவயங்களும் நடித்தன. இன்றைய நடிகர்கள் நடிப்பைக் கற்றுக் கொள்வதற்கு, சிவாஜி ஒரு பல்கலைக் கழகமாகத் திகழ்கிறார்..
சிவாஜிக்கு சிறப்பு...
அவருடைய பிறந்த நாளை கலையுலக விழாவாக நடிகர் சங்கம் ஆண்டுதோறும் கொண்டாடி விருதுகள் வழங்க வேண்டும். நடிப்புக்கு இலக்கணம் வகுத்த நடிகருக்கு அதுவே சிறப்பு செய்வ தாக இருக்கும்' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications