மாயமான விமானத்தை தேடும் பணியை துரிதப்படுத்த உத்தரவு.. அதிகாரிகளுடன் பொன்.ராதாகிருஷ்ணன் ஆலோசனை..
சென்னை : மாயமான டோர்னியர் விமானத்தை தேடும் பணியில் முழு வீச்சில் ஈடுபட கடலோர பாதுகாப்பு படை அதிகாரிகளுக்கு கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து மத்திய கப்பல் மற்றும் சாலை போக்குவரத்துத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது...

கடலோர பாதுகாப்பு படை விமானம் கடந்த மாதம் நடந்த பாதுகாப்பு ஒத்திகையின் போது மாயமானது. மாயமான விமானத்தை தேடும் பணியில் கடலோர காவல் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
மாயமான விமானத்தில் பயணித்த அதிகாரிகளின் நிலை குறித்தும், மாயமான விமானத்தை மீட்கும் முயற்சியில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்தும் கடலோர பாதுகாப்பு படை ஐ.ஜி. சத்யபிரகாஷ் சர்மா மற்றும் அதிகாரிகள் மத்திய கப்பல் மற்றும் சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை சென்னையில் நேற்று சந்தித்து பேசினர்.
அப்போது, பொன்.ராதாகிருஷ்ணன் அதிகாரிகளிடம், மீட்பு பணி நிலவரம் குறித்து கேட்டறிந்தார். மேலும் அவர், கடலோர பாதுகாப்பு படையினர் முழு வீச்சில் தேடும் பணியினை துரிதப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications