அனைத்து கூட்டுறவு வங்கிகளிலும் யுபிஐ வசதி.. ரேஷன் கடைகளுக்கும் வருகிறது.. வெளியான 'மாஸ்' அறிவிப்பு
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து 23 மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகளிலும் யு.பி.ஐ வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதிலுமுள்ள அனைத்து நியாயவிலைக் கடைகள் உள்ளிட்டவற்றிலும் இந்த வசதி விரிவுபடுத்தப்படும் என்று கூட்டுறவு சங்க பதிவாளர் தெரிவித்துள்ளார்.
டிஜிட்டல் பண பரிவர்த்தனை தற்போது மக்கள் மத்தியில் அதிகரித்து விட்டது. அதிலும் சிறிய பெட்டிக்கடைகளில் கூட யுபிஐ வசதியை பயன்படுத்தி பலரும் பண பரிவர்த்தனை செய்வதை காண முடிகிறது. தேசியமயாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகளில் யுபிஐ வசதியை பயன்படுத்தி பண பரிவர்த்தனை செய்யும் வசதி உள்ள நிலையில் கூட்டுறவு வங்கிகளிலும் இந்த வசதி விரிவு படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட கூட்டுறவு வங்கிகளிலும் யுபிஐ வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக கூட்டுறவு சங்க பதிவாளர் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் மாவட்ட கூட்டுறவு வங்கிகள் மொத்தம் 23 செயல்பட்டு வரும் நிலையில், இந்த வங்கிகளில் வாடிக்கையாளர்களின் தேவையை கருத்தில் கொண்டு யு.பி.ஐ. வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- தமிழகத்தில் உள்ள உள்ள அனைத்து 23 மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகளிலும் யு.பி.ஐ வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகம் முழுவதும் உள்ள 23 மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகள் மற்றும் அதன் 922 கிளைகளிலும் உள்ள வாடிக்கையாளர்கள் பயன்பெறுவர்.

தனியார் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளுக்கு ஈடாக வங்கிச் சேவைகளை அளிப்பதில் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகளும் முழு திறனையும் பெற்றிருக்கின்றன. வாடிக்கையாளர்கள் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகளின் மூலமாகவும் NEFT, RTGS உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் பெற முடியும். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 623 நியாயவிலைக் கடைகள் உள்ளிட்ட அனைத்து கூட்டுறவு நிறுவனங்களில் கியூ ஆர் கோடு மூலமாக யுபிஐ மூலம் பண பரிவர்த்தனை மேற்கொள்ளும் சேவை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
இது படிப்படியாக விரிவுபடுத்தப்படும். மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து 33,841 நியாயவிலைக் கடைகள், 41 கூட்டுறவு விற்பனைப் பண்டக சாலைகள், 363 பிரதம கூட்டுறவுப் பண்டக சாலைகள், 380 கூட்டுறவு மருந்தகங்கள், 58 கூட்டுறவு பெட்ரோல் பங்குகள் ஆகிய அனைத்திலும் விரிவுபடுத்தப்படும்" என்றார்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications