ஊரப்பாக்கம் வீதியில் கிடந்த தலை.. பெண் விவகாரத்தில் ஆட்டோ டிரைவருக்கு நேர்ந்த பயங்கரம்
பெண் விவகாரம் தொடர்பாக ஆட்டோ டிரைவர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
ஊரப்பாக்கம்: 30 வயது மதிக்கத்தக்க ஒருவரின் தலை மட்டும் துண்டாக கிடந்த சம்பவம் ஊரப்பாக்கம் பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
கடப்பேரியை சேர்ந்தவர் கமலக்கண்ணன். ஆட்டோ ஓட்டுனர். இவர் மீது தாம்பரம் போலீஸ் ஸ்டேஷனில் பல்வேறு வழக்குகள் உள்ளன. ராஜீவ்காந்தி நகரில் ஒரு பெண்ணுடன் நெருக்கமாக பழகி வந்தார்.

மோதலாக வெடித்தது
அதே பகுதியை சேர்ந்த பால்ராஜ் என்பவருக்கு இது பிடிக்காத காரணத்தினால், கமலக்கண்ணனை பலமுறை எச்சரித்தார். சில சமயம் இருவருக்குள்ளும் மோதலும் வெடித்தது. இது தொடர்பாக புகாரும் அளிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

தனியாக கிடந்த தலை
இந்நிலையில் ஊரப்பாக்கம் ராஜீவ் காந்தி நகர் வீதியில் இன்று காலை 30 வயது மதிக்கத்தக்க வாலிபரின் தலை மட்டும் துண்டாக கிடந்தது. இதனை கண்ட அவ்வழியாக சென்ற மக்கள் அலறியடித்து ஓடியதுடன், கூடுவாஞ்சேரிபோலீசாருக்கும் தகவல் அளித்தனர். சம்பந்தப்பட்ட பெண்ணின் வீட்டின் முன்பே அந்த தலை விழுந்து கிடந்தது.

உடலை தேடும் பணி
விரைந்து வந்த போலீசார் தனியாக விழுந்து கிடந்த தலையை கைப்பற்றினர். உடலை தேடும் பணியை தொடர்ந்தனர். ஆனால் உடலை கைப்பற்ற முடியாத காரணத்தினால் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அந்த நாய், சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஓடிச்சென்று நின்றுவிட்டது.

கொலைகாரர்களுக்கு வலை
அதனால் கமலக்கண்ணனை கொலை செய்துவிட்டு, மர்மகும்பல் வாகனத்தில் தப்பி சென்று இருக்கலாம் என போலீசார் தெரிவிக்கின்றனர். இந்த கொலை குறித்து சம்பந்தப்பட்ட பெண்ணிடமும், ஏற்கனவே கமலக்கண்ணனுடன் மோதிய பால்ராஜிடமும் விசாரணை நடத்தி வரும் போலீசார், தப்பிச் சென்ற கொலையாளிகளையும் தேடி வருகின்றனர்.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications