“ஆசைப்பட்டிருந்தால் அக்கா இருந்த போதே பதவிக்கு வந்திருக்க மாட்டேனா?” சசிகலா நெத்தியடி பேட்டி

தான் விரும்பியிருந்தால் ஜெயலலிதா இருந்த போதே பதவிக்கு வந்திருப்பேன் என்று சசிகலா ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: தான் கட்சிப் பதவிக்கு வர வேண்டும் என்று விரும்பியிருந்தால், ஜெயலலிதா உயிரோடு இருந்தப்போதே பதவியை கேட்டு பெற்றிருப்பேன் என்று ஜெயலலிதாவின் தோழி சசிகலா ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

'பிரவோக்' என்ற ஆங்கில இதழின் ஆசிரியராக உள்ளார் அப்சரா ரெட்டி. திருநங்கையான இவர், ஜெயலலிதாவின் தோழி சசிகலாவிடம் பேட்டி எடுக்க 4 மாதங்களுக்கு முன்பு அனுமதி கேட்டுள்ளார். ஜெயலலிதா காலமாகி 10 நாளுக்கு பிறகு பேட்டி எடுக்க சசிகலா அனுமதி கொடுத்துள்ளார். இதனையடுத்து சசிகலாவிடம் அப்சரா 45 நிமிடங்கள் பேட்டி எடுத்துள்ளார்.

V.K. Sasikala’s first inverview in English Magazine

பேட்டியின் போது சசிகலா மனம் திறந்து பேசியதாக அப்சரா கூறியுள்ளார். 5 நிமிடங்கள் மட்டுமே தனக்கு பேட்டி கொடுக்க சம்மதம் தெரிவித்திருந்த சசிகலா, பேட்டி தொடங்கிய உடன் 45 நிமிடங்கள் பேசியதாக சொல்லும் அப்சரா, எந்தக் கேள்விக்கும் தயக்கம் இல்லாமல் நிதானமாகவும் பொறுமையாகவும் பதில் அளித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

அரசியல் இல்லாமல் ஜெயலலிதாவுக்கும் சசிகலாவுக்கும் இடையிலான நட்பு குறித்து மட்டுமே பேட்டி எடுக்க வேண்டும் என்ற நினைத்திருந்த தனக்கு அரசியல் சம்பந்தப்பட்ட கேள்விகளையும் கேட்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டது என்று சொல்லும் அப்சரா, அதற்கும் சசிகலா அசராமல் பதில் அளித்தார் தனது பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். அப்போதுதான், தான் கட்சி பதவிக்கு வரவேண்டும் என்று ஆசைப்பட்டிருந்தால், அக்கா உயிரோடு இருந்தப்போதே பதவியை கேட்டு பெற்றிருக்க முடியும். ஆனால், தற்போது வரை எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் கட்சியில் இருக்கிறேன் என்று சசிகலா கூறியுள்ளார்.

மறைந்த ஜெயலலிதாவிற்கு தோழியாகும் முன்பு, ஒரு தமிழ் வார இதழில் சசிகலாவின் நேர்காணல், விளையாட்டிற்கு வருகிறது வீடியோ என்ற தலைப்பில் வெளியானது. அதன்பிறகு இப்போதுதான் 'பிரவோக்' என்ற ஆங்கிலப் பத்திரிகைக்கு சசிகலா பேட்டி அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+