திண்டுக்கல் மாவட்ட ரஜினி மக்கள் மன்ற செயலாளர் தம்புராஜ் தற்காலிகமாக நீக்கம்
திண்டுக்கல் மாவட்ட ரஜினி மக்கள் மன்ற செயலாளர் தம்புராஜ் தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டார்.
சென்னை: திண்டுக்கல் மாவட்ட ரஜினி மக்கள் மன்ற செயலாளர் பொறுப்பிலிருந்து தம்புராஜ் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார் என்று நிர்வாகி சுதாகர் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து வி.எம்.சுதாகர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: திண்டுக்கல் மாவட்ட ரஜினி மக்கள் மன்ற செயலாளர் தம்புராஜ் , ரஜினி மக்கள் மன்ற ஒற்றுமைக்கும் ஒழுக்கத்துக்கும் கட்டுப்பாட்டுக்கும் முரணாக செயல்பட்டு கொண்டிருப்பதால் அவரை ரஜினி மக்கள் மன்ற அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து தற்காலிகமாக தகுதிநீக்கம் செய்து அவருடைய செயல்பாடுகளையும் நடவடிக்கைகளையும் கண்காணித்து அவருடைய செயல்பாடுகள் திருப்திகரமாக இருக்கும்பட்சத்தில் அவருடைய பதவி குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

அனைத்து மாவட்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அவருடன் நேரடியாகவோ மறைமுகமாகவோ மற்ற எந்த விதத்திலோ தொடர்பு வைத்துக் கொள்ள கூடாது என்று கேட்டுக் கொள்கிறோம்.

திண்டுக்கல் மாவட்ட பொறுப்பாளர் ஆர்.ஆர்.அரவிந்த் மாவட்ட செயலாளர் பணிகளையும் தற்காலிகமாக கூடுதலாக கவனிப்பார் என்பதை தெரிவித்துக் கொண்டு ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளும் உறுப்பினர்களும் அவருடன் ஒன்றுபட்டு செயல்படவும் ஒத்துழைக்கவும் அன்புத் தலைவர் ஒப்புதலின்படி அறிவுறுத்துகிறோம் என்று தெரிவித்துள்ளார்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications