ஆளுநருடன் ஓபிஎஸ் அணி மைத்ரேயனும் திடீர் சந்திப்பு!
முதல்வர் ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த மைத்ரேயன் எம்.பி. இன்று ஆளுநரை மீண்டும் சந்தித்து பேசினார்.
சென்னை: முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் சார்பில் மாநிலங்களவை எம்.பி. மைத்ரேயன் மற்றும் முன்னாள் எம்.பி. மனோஜ் பாண்டியன் ஆகியோர் நேற்று மாலை தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்தனர்.
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் ஆளுநரை சந்திப்பதற்காக ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரும் அதிமுக மாநிலங்களவை உறுப்பினருமான மைத்ரேயன் நேற்று மாலை கிண்டி ராஜ்பவன் வந்தனர். அவருடன் முன்னாள் எம்.பி. மனோஜ் பாண்டியனும் வந்திருந்தார். ஆளுநர் மாளிகையில் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை இருவரும் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

ஏற்கனவே ஒரு முறை இவர்கள் ஆளுநரை சந்தித்து பேசினர். அந்த சந்திப்பு மரியாதை நிமித்தமான என ஆளுநர் மாளிகை வட்டார தகவல்கள் தெரிவித்தன. இந்நிலையில் மீண்டும் நேற்று சந்தித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக அதிமுக சட்டசபை குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட சசிகலா ஆதரவாளர் எடப்பாடி பழனிச்சாமி மாலை 5.30 மணி அளவில் ஆளுநரை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது தமக்கான ஆதரவு எம்.எல்.ஏக்கள் பட்டியலை கொடுத்து முறைப்படி ஆட்சி அமைக்க உரிமை கோரினார் எடப்பாடி பழனிச்சாமி. இதையடுத்து 40 நிமிட இடைவேளியில் ஓபிஎஸ் தரப்பு சந்திப்பு நடைபெற்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications