தமிழகத்திற்கு தேர்தல் வரும் என்ற கமலின் கனவு ஒருபோதும் பலிக்காது - வைகைச் செல்வன்
தமிழகத்தில் விரைவில் தேர்தல் நடைபெறப்போவதாக கூறிய கமல்ஹாசனின் கனவு ஒருபோதும் பலிக்காது என்று அதிமுக செய்தி தொடர்பாளர் வைகைச் செல்வன் கூறியுள்ளார்.
சென்னை: நடிகர் கமல்ஹாசன் கனவு காண்பதை சினிமா உடன் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று அதிமுக செய்தித் தொடர்பாளர் வைகைச் செல்வன் கூறியுள்ளார். தமிழகத்தில் விரைவில் தேர்தல் வரப்போவதாக போவதாக கூறிய கனவு ஒருபோதும் பலிக்காது என்றும் கூறியுள்ளார்.
புதியதலைமுறை தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த கமல்ஹாசன், மக்கள் விரும்பாத நிலையில் தமிழகத்தில் அரசு நான்கு ஆண்டுகள் நீடிக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை என்றார். கட்டாய திருமணம் போல ஆட்சியை ஏன் நீடிக்க வேண்டும் என்றார்.

தமிழகத்திற்கு விரைவில் தேர்தல் நடைபெற வேண்டும் என்றும் தங்களுக்குத் தேவையான புதிய தலைவரை மக்களே தேர்வு செய்யட்டும் என்றும் கமல்ஹாசன் கூறினார். இதற்கு அதிமுக செய்தித் தொடர்பாளர் வைகைச் செல்வன் பதிலளித்துள்ளார்.
நடிகர் கமல் நல்ல நடிகர். கனவுலக நாயகன். அவர் கனவு காண்பதை சினிமா உடன் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று கூறிய அவர், தமிழகத்தில் விரைவில் தேர்தல் நடைபெறும் என்ற கமல்ஹாசனின் கனவு ஒருபோதும் பலிக்காது என்றார்.
மக்களால் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அதிமுக அரசு ஐந்து ஆண்டு காலம் நிறைவு செய்யும் என்றும் தெரிவித்தார். எனவே நடிகர் கமல்ஹாசன் கனவு காண்பதை சினிமா உடன் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் வைகைச் செல்வன் தெரிவித்துள்ளார்.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications