மநகூட்டணிக்கு மக்கள் ஆதரவு இல்லை என விஜயகாந்த் கூறியது உண்மை: வைகோ
மக்கள் நலக் கூட்டணிக்கு மக்கள் ஆதரவு இல்லை என விஜயகாந்த் கூறியது உண்மைதான் என வைகோ தெரிவித்துள்ளார்.
சென்னை: மக்கள் நலக் கூட்டணிக்கு மக்கள் ஆதரவு இல்லை என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியது உண்மைதான் என்று அக்கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரும் மதிமுக பொதுச்செயலருமான வைகோ கூறியுள்ளார்.
திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் நேற்று பிரசாரம் மேற்கொண்ட விஜயகாந்த், மக்கள் நலக் கூட்டணியுடன் தேர்தலின் போது தொகுதி உடன்பாடு மட்டும் வைத்திருந்தோம். அக்கூட்டணிக்கு மக்கள் ஆதரவு இல்லாததால் நாங்கள் வெளியேறிவிடோம் எனக் கூறியிருந்தார்.

இது தொடர்பாக வைகோ தெரிவித்துள்ளதாவது:
அதிமுக, திமுகவுக்கு மாற்றாக ஒரு சீரிய முயற்சியை மேற்கொண்டோம். மக்கள் நலக் கூட்டு இயக்கம், மக்கள் நலக் கூட்டணி என அது உருவானது.
தேமுதிகவுடன் மக்கள் நலக் கூட்டணி கூட்டணி அமைத்தால் மிகப் பெரிய வெற்றியை பெறும் என நம்பிக்கை இருந்தது. ஊடகங்களும் அப்படித்தான் கருத்தை தெரிவித்தன.
இதனால்தான் தமாகா தலைவர் வாசனும் எங்கள் அணியில் இணைந்தார். ஆனால் துரதிருஷ்டவசமாக மக்கள் நலக் கூட்டணியில் விஜயகாந்த் சேர்ந்த பிறகு, அதுவரை எங்களுக்கு ஆதரவு தந்த ஊடகங்கள், ஏடுகள் அப்படியே நேர் எதிராக இருட்டடிப்பு செய்தன.
எங்களைப் பற்றி அவதூறாக மக்களிடத்தில் சித்தரித்தனர். ஆகையால் எங்கள் முயற்சி பலனளிக்கவில்லை; எங்களுக்கு எதிர்பார்த்த வெற்றியும் கிடைக்கவில்லை; விஜயகாந்த் கூறியதில் உண்மை இருக்கிறது. நாங்கள் தொகுதி உடன்பாடு மட்டும்தான் வைத்திருந்தோம்.
இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.
-
காவி வண்ணத்தில் வள்ளுவர்., ஆளுநர் செய்தது அயோக்கியத்தனம்! வெடித்துக் கிளம்பிய வைகோ! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications