இனி "பச்சைத் தலைப்பாகைதான்" சபதம் என்னாச்சு? செய்தியாளர் கேள்விக்கு வைகோ 'உர்ர்'
கோவை: வாழ்நாளில் இனி எப்போதும் பச்சைத் தலைப்பாகைதான் அணிவேன் என்ற உங்கள் உறுதிமொழி என்னாச்சு என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு மதிமுக பொதுச்செயலர் வைகோ பதிலளிக்க மறுத்துவிட்டார்.
தமிழக சட்டசபை தேர்தலில் திடீரென தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் புதூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பச்சைத் தலைப்பாகை அணிந்து கலந்து கொண்டார் வைகோ. அப்போது பேசிய வைகோ, நான் இந்த பச்சை தலைப்பாகையை தேர்தலுக்காக அணியவில்லை. விவசாயிகளின் மேம்பாட்டுக்காக, அவர்களோடு எப்போதும் இருக்க வேண்டும் என்பதன் அடையாளமாக அணிந்துள்ளேன். இனிமேல் இதனை கழற்றவே மாட்டேன் என போவதில்லை என சபதம் போட்டார்.

அதேபோல் தேர்தல் வரை தலையில் பச்சைத் தலைப்பாகை, கழுத்தில் கருப்புத் துண்டு என வலம் வந்தார் வைகோ. ஆனால் தேர்தலுக்குப் பின்னர் பச்சைத் தலைப்பாகைக்கு டாட்டா காட்டிவிட்டார் அவர்.
இந்நிலையில் இன்று கோவை வந்த வைகோவிடம், பச்சை தலைப்பாகை ஏன் அணிவதில்லை என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளிக்க மறுத்த வைகோ, அதெல்லாம் வேணாமே என அந்த கேள்வியைத் தவிர்த்ததுடன், மக்கள் நலக்கூட்டணியில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நலக்கூட்டணியில் உள்ள 4 கட்சிகள் இணைந்து தேர்தலை சந்திப்போம். உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக, திமுக பணத்தை வாரி இறைக்கும் பணியை இப்போதே துவங்கி விட்டன. அதையும் மீறி வெல்வோம் என்றார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications