சென்னையில் இன்று முரசொலி பவளவிழா... வைகோ உட்பட எதிர்க்கட்சிகள் தலைவர்கள் பங்கேற்பு
சென்னை: திமுகவின் அதிகாரப்பூர்வ ஏடான முரசொலியின் பவளவிழா பொதுக் கூட்டம் இன்று சென்னையில் நடைபெறுகிறது. இதில் மதிமுக பொதுச்செயலர் வைகோ உட்பட எதிர்க்கட்சித் தலைவர்கள் ஒன்றாக பங்கேற்பதால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
முரசொலியின் 75-வது ஆண்டு நிறைவு பவள விழா கடந்த மாதம் சென்னையில் நடைபெற்றது. கடந்த மாதம் 11-ந் தேதியன்று நந்தனத்தில் நடைபெற்ற விழாவின் போது மழை குறுக்கிட்டதால் ஒத்திவைக்கப்பட்டது.

இந்த பொதுக்கூட்டம் இன்று சென்னை கொட்டிவாக்கம் ஓ.எம்.ஆர். சாலையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் மதிமுக பொதுச்செயலர் வைகோ உள்ளிட்ட எதிர்க்கட்சித் கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.

கடந்த சில ஆண்டுகளாக திமுகவை வைகோ கடுமையாக எதிர்த்து வந்தார். காவேரி மருத்துவமனையில் கருணாநிதி அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவரை பார்க்க சென்ற வைகோவுக்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அண்மையில் கருணாநிதியை கோபாலபுரம் வீட்டில் சென்று பார்த்து வைகோ நலம் விசாரித்தார். அப்போது செப்டம்பர் 5-ந் தேதி நடைபெறும் முரசொலி பவள விழாவில் தாம் பங்கேற்க உள்ளதாக வைகோவும் தெரிவித்தார். அதேபோல் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினும் தெரிவித்திருந்தார்.
இதனிடையே பவளவிழா பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தை ஸ்டாலின் நேற்று சென்று பார்வையிட்டார்.
-
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
காவி வண்ணத்தில் வள்ளுவர்., ஆளுநர் செய்தது அயோக்கியத்தனம்! வெடித்துக் கிளம்பிய வைகோ!












Click it and Unblock the Notifications