குளித்தலையில் பாரிவேந்தருக்கு ஆதரவாக வைகோ பிரச்சாரம்
கரூர்: தமிழ் இனத்திற்கு மன்னிக்க முடியாத துரோகத்தை செய்த சோனியா காந்தியின் காங்கிரஸ் கட்சியின் வரலாற்றை குப்பைத் தொட்டியில் தூக்கி எறிய வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளரும் ஐ.ஜே.கே. கட்சி நிறுவனருமான டாக்டர் பாரிவேந்தரை ஆதாித்து குளித்தலையின் பல பகுதிகளில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தேர்தல் பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவர் பேசுகையில்,
தமிழகத்தில் மதிமுக தொடங்கப்பட்டபோது முதல் முதலில் நகராட்சியை கைப்பற்றிய பகுதியில் கரூர் மற்றும் குளித்தலை அடங்கும். எனவே, மதிமுக மீதும் என் மீதும் அன்பு வைத்துள்ள இந்த குளித்தலை பகுதி மக்களை நான் வாழ்நாளில் என்றும் மறக்க மாட்டேன்.
குறிப்பாக கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக மதிமுகவை வலிமைப்படுத்தி வரும் பெருமை குளித்தலை தொண்டர்களையும், குளித்தலை நகராட்சி தலைவர் பல்லவி ராஜாவையே சேரும்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை. எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, விபத்து என தினசரி நடைபெறுகின்றது. குறிப்பாக காவிரி பகுதியில் மணல் கொள்ளை நடைபெறுகின்றது. இதை தடுக்க வேண்டிய தமிழக அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டுள்ளது.
மேலும், தமிழ் இனத்திற்கு மன்னிக்க முடியாத துரோகத்தை செய்த சோனியா காந்தியின் காங்கிரஸ் கட்சியை குப்பைத் தொட்டியில் தூக்கி எறிய வேண்டும்.
எனவே, வரும் தேர்தலில் தமிழன் தலை நிமிர்ந்து இருக்க வேண்டும் என்றால் கல்வியாளர் பாரிவேநத்ருக்கு வாக்களியுங்கள். அவர் உங்களை அறிவின் உச்சத்திற்கு கொண்டு செல்வார் என்றார்.












Click it and Unblock the Notifications