சட்டசபை தேர்தலில் போட்டியில்லை: வைகோ திடீர் அறிவிப்பு- கோவில்பட்டியில் விநாயகா ரமேஷ் போட்டி!!
கோவில்பட்டி: கோவில்பட்டி தொகுதியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், திடீரென, அக்கட்சியை சேர்ந்த விநாயகா ரமேஷ் என்பவர் வேட்புமனு தாக்கல் செய்தார். சட்டசபை தேர்தலில் தான் போட்டியிடப்போவதில்லை என்று வைகோ அறிவித்தார்.
மக்கள் நல கூட்டணி, தேமுதிக, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி கூட்டணியில், மதிமுகவுக்கு கோவில்பட்டி உள்ளிட்ட 29 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

மதிமுகவின் 29 தொகுதிகளில் தமிழர் முன்னேற்றப் படை, தமிழ்ப் புலிகள் கட்சிக்கு தலா 1 தொகுதி ஒதுக்கீடு செய்ய வைகோ சம்மதித்தார். இதையடுத்து மதிமுக 27 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
இதில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் வைகோ போட்டியிடுவார் என வேட்பாளர் பட்டியலில் பெயர் அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து தொண்டர்கள் உற்சாகத்தில் இருந்தனர்.
இதனிடையே வைகோ இன்று வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியானது. மீடியாக்கள் கோவில்பட்டியில் குவிந்திருந்தன.
அதேபோல வைகோ மதியம் சுமார் 1 மணிக்கு, தேர்தல் அலுவலர் அலுவலகத்திற்கு வேட்புமனு தாக்கல் செய்யும் தோரணையில் தொண்டர் படையோடு வந்தார்.
மீடியாக்களும், வைகோதான் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாக செய்தி வெளியிட தொடங்கின. இந்நிலையில், வைகோ வேட்புமனுவை தாக்கல் செய்யாமல், அப்பகுதி மதிமுக நிர்வாகி விநாயகா ரமேஷை வேட்புமனு தாக்கல் செய்ய வைத்து பரபரப்பு ஏற்படுத்தினார்.
வைகோ கடைசி நேரத்தில் எடுத்த இந்த முடிவு மீடியாவினரை மட்டுமல்லாது, அவரது கட்சியினரையே அதிர்ச்சியடைய வைத்தது.
இதன்பிறகு தொண்டர்கள் மத்தியில் திறந்த வேனில் இருந்தபடி வைகோ இதற்கான காரணம் குறித்து தெரிவித்தார். தன்னை தோற்கடிப்பதற்காக, திமுகவை தற்போது ஆட்டுவித்துவருபவர், தேவர்-நாயக்கர் சமூக மக்களிடையே ஜாதி கலவரத்தை தூண்ட முயலுவதாகவும், அதற்கான அறிகுறிகள் வெளியாக தொடங்கியதாகவும், எனவே கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடுவதில்லை என முடிவு செய்ததாகவும் அறிவித்தார் வைகோ.
மேலும், இந்த சட்டசபை தேர்தலில் தான் போட்டியிட போவதில்லை எனவும், கூட்டணி வெற்றிக்காக உழைக்க போவதாகவும் வைகோ அறிவித்தார்.
இதனிடையே, வைகோ இவ்வாறு ஒரு அறிவிப்பை வெளியிட்டுவிட்டு, திமுகவை குழப்பிவிட்டு, வரும் வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புள்ளதாகவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. திமுகவை டேமேஜ் செய்ததை போலவும் ஆயிற்று, தனக்கு பப்ளிசிட்டி கிடைத்ததை போலவும் ஆகும் என்பது வைகோ கணக்காக இருக்கலாம் என்று சில அரசியல் பார்வையாளர்கள் கூறுகிறார்கள்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications