பட்டு வேட்டி- சட்டையில் மாப்பிள்ளையான வைகோ!
கலிங்கப்பட்டி: மு.க.ஸ்டாலின்தான் பேன்ட் சட்டைக்கு மாறுவாரா.. மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும் இன்று தனது காஸ்ட்யூமை மாற்றி வித்தியாசமான தோற்றத்தில் காட்சி அளித்தார்.
தமிழக அரசியல்வாதிகளின் அடையாலம் மடிப்பு கலையாத, கசங்காத அந்த வெள்ளை வேட்டி வெள்ளைச் சட்டைதான். ஆனால் இப்போது மாடர்ன் அரசியல்வாதிகளாகவும் நம்மவர்கள் அடிக்கடி கெட்டப்பை மாற்றிக் கொள்கிறார்கள்.
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கிய நமக்கு நாமே பயணத்தின்போது பேன்ட் சட்டை போட்டு இன் செய்து கூலிங் கிளாஸ் போட்டு அசத்தினார். ஆட்டோவில் புட்போர்ட் பயணமும் செய்து கலக்கினார்.

வைகோவும் மாற்றம்
இந்த நிலையில் இன்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் டிரஸ்ஸிலும் ஒரு மாற்றத்தைக் காண முடிந்தது.

கருப்பு எங்கே?
அவ்வப்போது கெட்டப்பை மாற்றுபவர்தான் வைகோ. ஆனால் வைகோ என்றாலே அடையாளம் அந்த பெரிய கருப்புத் துண்டுதான். ஆனால் கலிங்கப்பட்டிக்கு வந்த வைகோ கருப்புத் துணைட போட்டு விட்டு பட்டுத் துண்டு போட்டிருந்தது கண்ணைக் கவருவதாக இருந்தது.

பட்டுத் துண்டுடன்
பட்டுத் துண்டு போட்டு, முழுக்கைச் சட்டை வெள்ளை வேட்டியில் சும்மா மாப்பிள்ளை போல ஜம்மென்று காணப்பட்டார் வைகோ.

கலைஞர்களுக்கு பொன்னாடை
தான் வந்தபோது வாத்தியக் கருவிகளை வாசித்து வரவேற்பு அளித்த கிராமப்புற கலைஞர்களுக்கு பொன்னாடை அணிவித்தும் அவர் கெளரவித்தார்.

அடுத்து யாரெல்லாம் கெட்டப்பை மாத்தப் போறாங்களோ
ஸ்டாலின் மாற்றி விட்டார். வைகோவும் இன்று மாற்றம் கண்டார். அடுத்து எந்தெந்த தலைவர்களெல்லாம் கெட்டப்பை மாற்றிக் கலக்கப் போகிறார்களோ..!
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications