நாஞ்சில் சம்பத் என்னைப் புகழ்ந்து பேசியது மட்டுமே ஞாபகத்தில் இருக்கு.. வைகோ "நச்"!
திருச்சி: நாஞ்சில் சம்பத் விவகாரம் அதிமுகவின் உட்கட்சிப் பிரச்சினை. அவர் என்னைப் புகழ்ந்து பேசியது மட்டுமே எனது நினைவில் உள்ளது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கருத்து தெரிவித்துள்ளார்.
நாஞ்சில் சம்பத் புதிய தலைமுறை டிவிக்கு அளித்த பேட்டியின்போது கூறிய வார்த்தைகளால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு விட்டது. இது அவரது கட்சிப் பதவிக்கும் ஆப்பு வைத்து விட்டது.

இந்த நிலையில் திருச்சிக்கு வந்திருந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோவிடம் சம்பத் விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு வைகோ பதிலளிக்கையில், அவர் என்னை பற்றி புகழ்ந்து பேசிய மட்டுமே என் நினைவில் இருக்கிறது. நாஞ்சில் சம்பத் நீக்கம் அதிமுகவின் உட்கட்சி விவகாரம். இதுகுறித்து கருத்து கூற விரும்பவில்லை. வரும் தேர்தலில் அதிமுக தோற்கும் என்று மட்டும் பதிலளித்தார் வைகோ.
ஒரு காலத்தில் வைகோவின் போர் வாள் ஆக மதிமுக மேடை தோறும் முழங்கி வந்தவர் நாஞ்சில் சம்பத். வைகோவுக்கு அடுத்து மதிமுகவில் அபாரமான பேச்சாற்றலுடன் வலம் வந்தவர் அவர். ஆனால் அங்கிருந்து விலகி அதிமுகவில் சேர்ந்தார் என்பது நினைவிருக்கலாம்.
இன்னோவா கார் அன்பளிப்புடன் அதிமுகவில் களம் இறங்கிய அவர் தொடர்ந்து மேடை மேடையாக முழங்கி வந்தார். எந்தப் பேச்சு அவரை உயர்த்தியதோ, இன்று அதே பேச்சே அவரது பதவிக்கு ஆப்பு வைத்து விட்டது சுவாரஸ்யம்தான்.
-
காவி வண்ணத்தில் வள்ளுவர்., ஆளுநர் செய்தது அயோக்கியத்தனம்! வெடித்துக் கிளம்பிய வைகோ! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications