திமுக ஆட்சியை பிடிப்பது நிச்சயம்... ஸ்டாலின் முதல்வராவது சத்தியம்.. வைகோ
தமிழகத்தில் திமுக ஆட்சியை பிடிப்பது நிச்சயம் என்றும் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராவதும் நிச்சயம் என்றும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
சென்னை: தமிழகத்தில் திமுக ஆட்சியை நிச்சயம் பிடிக்கும் என்றும் மு.க.ஸ்டாலின் முதல்வராவார் என்றும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
ஆர்.கே.நகருக்கு வரும் 21-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஆர்.கே.நகரில் திமுக வேட்பாளர் மருதுகணேஷை ஆதரித்து அங்கு நடந்த பிரசார கூட்டத்தில் வைகோ கூறுகையில், திராவிட இயக்கத்தின் ஈட்டி முனையாக உள்ள திமுகவை வீழ்த்த முடியாது.

இந்தியா என்பது பல தேசிய இனங்களை கொண்ட நாடு. எனவே மதசார்பின்மையே இந்தியாவின் முதகெலும்பு ஆகும். தமிழகத்தில் ஆட்சி நடத்துவது முதல்வரா? ஆளுநரா?. வரம்புகளை மீறி ஆளுநர் செயல்படுகிறார்.
ஆளுநரின் செயல்பாடுகள் சுயாட்சிக்கும் , ஜனநாயகத்துக்கும் விடப்பட்ட சவால். அதிமுக அரசு கொத்தடிமை கூட்டமாக உள்ளது.
திராவிட கட்சிகளை வீழ்த்த வேண்டும் என்ற மதவாத சக்திகளின் எண்ணம் நிறைவேறாது. வாக்குறுதிகளை மீறி ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துவிட்டது.
சுதந்திர தினத்தில் தேசியக் கொடியை முதல்வர்கள் ஏற்ற வேண்டும் என்ற உரிமையை பெற்றுத் தந்தவர் கருணாநிதி. நீட் தேர்வு, ஜிஎஸ்டி, உணவு பாதுகாப்பு சட்டம் என அனைத்திலும் பாஜக அரசிடம் சரணாகதி அடைந்து விடுகிறது அதிமுக ஆட்சி.
மதசார்பின்மையை நசுக்க நினைத்தால் தேசிய ஒருமைப்பாடு சிதைந்து விடும். தமிழகத்தில் திமுக ஆட்சியைப் பிடிப்பது நிச்சயம், மு.க.ஸ்டாலின் முதல்வராவதும் நிச்சயம் என்றார் வைகோ.
-
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
காவி வண்ணத்தில் வள்ளுவர்., ஆளுநர் செய்தது அயோக்கியத்தனம்! வெடித்துக் கிளம்பிய வைகோ! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications