தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்: விஜயேந்திரருக்கு வைகோ கண்டனம்.. வருத்தம் தெரிவிக்க வலியுறுத்தல்!
தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு எழுந்து நிற்காத விஜயேந்திரருக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

விஜயேந்திரருக்கு தொடரும் எதிர்ப்பு... சங்கரமடத்தில் போலீஸ் குவிப்பு
சென்னை தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு எழுந்து நிற்காத விஜயேந்திரருக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்
தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு எழுந்து நிற்காமல் விஜயேந்திரர் உதாசீனப்படுத்திய விவகாரம் பூதாகரமாகியுள்ளது. தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்ததாக கூறி அவர் மீது காவல்நிலையங்களில் புகார்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன.

அரசியல் கட்சியினரும் விஜயேந்திரருக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். விஜயேந்திரர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் விஜயேந்திரருக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்காத விஜயேந்திரர் மற்றும் காஞ்சி சங்கரமடம் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்றும் வைகோ வலியுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications