கோவில்பட்டி தொகுதியில் வைகோ போட்டி - மதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு
சென்னை : மதிமுக வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டார். கோவில்பட்டி தொகுதியில் வைகோ போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தேமுதிக- மக்கள் நலக் கூட்டணியில் மதிமுகவுக்கு 29 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இத்தொகுதிகளுக்கான விருப்ப மனுக்கள் நேற்று பெறப்பட்டு நேற்று மாலை முதல் இரவு வரை நேர்காணலும் நடத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து சென்னை அண்ணாநகரில் இன்று காலையில் தேர்தல் பிரசாரத்தை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தொடங்கினார். அப்போது மதிமுக போட்டியிடும் 29 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலையும் வைகோ வெளியிட்டார்.
மதிமுக வேட்பாளர்கள் 27 தொகுதிகளிலும், தமிழர் முன்னேற்றப்படை வீரலட்சுமியும், தமிழ் புலிகள் கட்சியைச் சேர்ந்த நாகை திருவள்ளுவனும் பம்பரம் சின்னத்தில் 2 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றனர்.
மதிமுக வேட்பாளர் பட்டியல்:
1. கோவில்பட்டி - வைகோ
2. திருப்போரூர் - மல்லை சத்யா
3. காரைக்குடி - செவந்தியப்பன்
4. ஆலங்குடி - மருத்துவர் சந்திரசேகரன்
5. செஞ்சி - ஏ.கே. மணி
6. சங்கரன்கோயில் - சதன் திருமலைக்குமார்
7. குளச்சல் - சம்பத் சந்திரா
8. திருச்சி மேற்கு - ரொகையா
9. அண்ணாநகர் - மல்லிகா தயாளன்
10. தூத்துக்குடி - பாத்திமா பாபு
11. மதுரை தெற்கு - கோபிநாதன்
12. ஆற்காடு - உதயகுமார்
13. ஆயிரம் விளக்கு- ரெட்சன் அம்பிகாபதி
14. கிணத்துக்கடவு - ஈஸ்வரன்
15. நாகர்கோவில் - ராணி செல்வி
16. பாளையங்கோட்டை - நிஜாம்
17. உசிலம்பட்டி - பாஸ்கர சேதுபதி
18. சாத்தூர் - ரகுராமன்
19. ஆவடி - அந்திரிதாஸ்
20. துறைமுகம் - முராத் புகாரி
21. பூந்தமல்லி- கந்தன்
22. ஈரோடு மேற்கு - முருகன்
23. ஜெயங்கொண்டம் - கந்தசாமி
24. முதுகுளத்தூர் - பொ. ராஜ்குமார்
25. பல்லடம் - க. முத்துரத்தினம்
26. அரவக்குறிச்சி - கோ. கலையரசன்
27. சிங்காநகல்லூர் - அர்ஜூன ராஜ்
28. தாராபுரம் - வழக்குரைஞர் நாகை. திருவள்ளுவன் ( தமிழ் புலிகள் கட்சி)
29. பல்லாவரம் - கி. வீரலட்சுமி பி.ஏ. ( தமிழர் முன்னேற்றப்படை)
முன்னதாக அண்ணாநகரில் பிரச்சாரத்தை தொடங்கிய வைகோவிற்கு ஏராளமானோர் பூரணகும்ப மரியாதை அளித்தனர்.
#மதிமுக வேட்பாளர் பட்டியல் #MDMK #Vaiko pic.twitter.com/OrQjdMgMzP
— Oneindia Tamil (@thatsTamil) April 16, 2016
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications