பிரச்சாரத்தில் ஆர்வம் காட்டாத ராமதாஸுடன் வைகோ சந்திப்பு
கிருஷ்ணகிரி: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸை கிருஷ்ணகிரியில் சந்தித்துப் பேசினார்.
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பாஜக கூட்டணியில் வேண்டா வெறுப்பாக இடம் பெற்றுள்ளதோடு பிரச்சாரத்திலும் அதீத ஆர்வம் காட்டவில்லை. பெரும் முயற்சிக்குப் பின் பாமக வேட்பாளர்களுக்கு மட்டுமே பிரச்சாரம் செய்து வருகிறார்.
இந் நிலையில் கிருஷ்ணகிரி லோக்சபா தொகுதியில் போட்டியிடும் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ஜி.கே மணியை ஆதரித்து வைகோ தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். தனது காலை நேர பிரசாரத்தை முடித்துவிட்டு கிருஷ்ணகிரியில் உள்ள விடுதியில் தங்கியிருந்தார்.

அப்போது காஞ்சிபுரம் லோக்சபா தொகுதியில் தேர்தல் பிரசாரத்தை முடித்துவிட்டு டாக்டர் ராமதாஸ் கிருஷ்ணகிரி வருகை தந்தார். வைகோ தங்கியிருந்த அதே விடுதியில் ராமதாஸ் தங்கினார்.
இத்தகவலை வைகோவிடம் ஜி.கே கோ.க.மணி தெரிவித்தார். உடனே தனது அறையிலிருந்த வைகோ டாக்டர் ராமதாஸ் தங்கியிருந்த அறைக்குச் சென்று அவரிடம் நலம் விசாரித்தார்.
பின்பு இருவரும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரச்சார வியூகங்கள் குறித்து சுமார் 20 நிமிடங்கள் மனம் விட்டு பேசியதாக பாமக, மதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications