வைகோ கார் மீது தொண்டர்கள் கார்கள் மோதல்: அதிருஷ்டவசமாக காயமின்றி தப்பினார்
மதுரை: நான்குவழி சாலையில் மாடு குறுக்கே சென்றதால் வைகோவின் கார் திடீரென நிறுத்தப்பட்டது. இதனால் பின்னால் தொண்டர்கள் வந்த கார் வரிசையாக மோதி விபத்து ஏற்பட்டது.
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் உள்ள மருதுபாண்டியர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தி விட்டு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேற்று மதியம் திரும்பி வந்து கொண்டிருந்தார். மதுரையை அடுத்த மேலூர் அருகே நான்குவழிச் சாலையில் கத்தபட்டி சுங்கசாவடி வழியாக வந்தார். அவரது காரை பின்தொடர்ந்து 5க்கும் மேற்பட்ட கார்களில் ம.தி.மு.க. நிர்வாகிகளும் வந்தனர்.

வெள்ளரிபட்டியை அடுத்து வந்த போது ரோட்டின் குறுக்கே திடீரென்று ஒரு பசு மாடு குறுக்கிட்டது. இதை பார்த்ததும் மாடு மீது மோதாமல் இருக்க வைகோ வந்த காரை டிரைவர் திடீரென பிரேக் பிடித்து நிறுத்தினார்.
அப்போது பின்னால் வந்த அவரது ஆதரவாளர்களின் கார்கள் வரிசையாக ஒன்றன்பின் ஒன்றாக வைகோவின் கார் மீது மோதின. இதனால் வைகோ காரின் பின்பகுதி லேசாக சேதமடைந்தது. அதிருஷ்டவசமாக அவர் காயமின்றி தப்பினார். கார்களுக்கு மட்டுமே சிறு சேதம் ஏற்பட்டதால், வைகோ மற்றும் அவரது ஆதரவாளர்கள் மதுரைக்கு பயணத்தை தொடர்ந்தனர்.
இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications