திமுகவின் வக்கீல் நோட்டீஸை வைகோ சட்டரீதியாக சந்திப்பார்: பிரேமலதா பேச்சு

Subscribe to Oneindia Tamil

நெல்லை: திமுக தலைவர் கருணாநிதி அனுப்பியுள்ள நோட்டீசை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சட்டரீதியாக சந்திப்பார் என தேமுதிக மகளிரணி தலைவர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.

தேமுதிக தேர்தல் அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் இன்று நெல்லையில் நடந்தது. இதில் தேமுதிக தேமுதிக மகளிரணி தலைவர் பிரேமலதா விஜயகாந்த் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது: தி.மு.க., அதிமுக., ஆகிய இரண்டு கட்சிகளுக்கு மாற்றாக தே.மு..தி.க., திகழும், தமிழகத்தில் லஞ்சம் ஊழல் அற்ற ஆட்சியை கொண்டு வர வேண்டும்.

vaiko face the dmk's legal notice: Premalatha Vijayakanth

லஞ்சம், ஊழல் இல்லாத ஆட்சியை ஆதரிக்க வேண்டும் என்ற அடிப்படையில் மக்கள் நல கூட்டணியை ஆதரித்துள்ளோம். தூய ஆட்சி வேண்டும் என்ற எண்ணம் மக்களிடையே தற்போது வந்துவிட்டது. தேமுதிக ஆட்சிக்கு வந்தால் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றார்.

மேலும், நாளிதழில் வந்த செய்திக்காக வைகோவுக்கு நோட்டீஸ் அனுப்பியது தலைகுனிவானது. இதை திமுக தலைவர் திரும்ப பெற வேண்டும். இதை சட்ட ரீதியாக வைகோ சந்திப்பார். வைகோவுக்கு நோட்டீஸ் அனுப்பியதை கருணாநிதி திரும்பப் பெற வேண்டும்.

கூட்டணிக்காக கடந்த நான்கு மாதங்களாக தேமுதிகவை நோக்கி வராத கட்சிகளே கிடையாது. திமுக, அதிமுக கட்சிகளுக்கு மாற்றாக தேமுதிக இருக்கும். இவ்வாறு பிரேமலதா பேசினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+