மகன் வையாபுரி காரில் போய் மூப்பனார் மகன் ஜி.கே.வாசனைப் பார்த்தாராமே வைகோ?
சென்னை: மக்கள் நல கூட்டணியில் இன்னும் சில கட்சிகளை சேர்ப்பதற்கான பேச்சுவார்த்தையில் வைகோ ஈடுபட்டுள்ளதாகவும், இதற்காக அவர், யாருக்கும் தெரியாமல் காரை மாற்றிக்கொண்டு உலாவுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மக்கள் நல கூட்டணி என்ற பெயரில் அமைக்கப்பட்டுள்ள அரசியல் கூட்டணியில், விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக ஆகிய கட்சிகள் இணைந்துள்ளன.
இக்கூட்டணி மதுரையில் நடத்திய மாநாட்டிற்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. இது அக்கூட்டணி தலைவர்களுக்கு பெரும் உற்சாகத்தை கொடுத்துள்ளது. எனவே, மேலும் பல கட்சிகளை கூட்டணியில் சேர்க்க இக்கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரான, வைகோ அயராது பாடுபட்டு வருகிறார்.

வைகோ பேச்சுவார்த்தை
தேமுதிக, தமிழ் மாநில காங்கிரஸ், கொங்கு மக்கள் கட்சி போன்ற பல்வேறு கட்சி தலைவர்களுடன், வைகோ பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. ஆயினும், ரகசியமாக இந்த பேச்சுவார்த்தைகள் நடக்கின்றனவாம்.

கார் மாற்றம்
வழக்கமாக 'பஜேரோ' என்ற எஸ்.யூ.வி வகை பெரிய காரில்தான் வைகோ செல்வார். ஆனால் தற்போது பல அரசியல் கட்சித் தலைவர்களை ரகசியமாக சந்திக்க வேண்டும் என்பதால் மகன் வையாபுரியின் சிறிய ரக காரில் யாருக்கும் தெரியாமல் செல்கிறாராம்.

வாசனுக்கு 50 சீட்
இதே காரில் சென்று வாசனையும் சமீபத்தில், வைகோ சந்தித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. வாசன் கட்சிக்கு 50 சீட்டுகள் வரை கொடுப்பதாக வைகோ வாக்குறுதியளித்துள்ளாராம்.

வாசனுக்கும் ஓ.கே
அதிமுக தரப்பு ஒரு சில தொகுதிகளை மட்டுமே தர ஒப்புக்கொண்டுள்ளது, திமுகவோ, காங்கிரஸ் கட்சியோடு கை ஜோடித்துள்ளது. எனவே இரு பிரதான கட்சிகள் பக்கமும் போக முடியாமல் நிற்கும் வாசன், மக்கள் நல கூட்டணி பக்கம் சாய ஒப்புக்கொள்வார் என தெரிகிறது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications