விஜயகாந்த் பிறந்தநாள்: நேரில் வாழ்த்திய வைகோ, திருமா, தமிழிசை
விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு வைகோ, திருமாவளவன் நேரில் வந்து வாழ்த்து கூறினர். தமிழிசை சவுந்தரராஜன் தொலைபேசியில் வாழ்த்து கூறினார்.
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்தின் 66வது பிறந்தநாளை முன்னிட்டு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விசிக தலைவர் திருமாவளவன், பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் நேரில் சென்று வாழ்த்து கூறினார்.
விஜயகாந்தின் 66வது பிறந்த நாள் நள்ளிரவு முதல் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. விஜயகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் தேமுதிகவினர் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று விஜயகாந்த் வீட்டிற்கு வந்த வைகோ அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறினார். இருவரும் பழைய நினைவுகளை அசைபோட்டனர்.

பீனிக்ஸ் கேக்
கடந்த ஆண்டு பிறந்தநாள் விழாவின் போது மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் ஜி.ராமகிருஷ்ணன், முத்தரசன், திருமாவளவன், வைகோ ஆகியோர் இணைந்து வந்து பீனிக்ஸ் கேக் வெட்டி வாழ்த்தினர்.

ஞாபகம் வருதே
மிகப்பெரிய மாலையை கொண்டு வந்து விஜயகாந்திற்கு அணிவித்து ஒற்றுமையை உணர்த்தினர். தேர்தலில் தோல்வியடைந்தாலும் கூட்டணி நீடிக்கிறது என்று உணர்த்தினர். ஆனால் சில மாதங்கள் கூட நீடிக்கவில்லை, மக்கள் நலக்கூட்டணியில் இருந்து விலகியது மதிமுக.

தேர்தல் கூட்டணி
2016ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலின் போது மக்கள் நலக்கூட்டணியும், தேமுதிகவும் இணைந்து தேர்தலை சந்தித்தன. படு பயங்கர தோல்வியை சந்தித்தது இந்த கூட்டணி. இதனையடுத்து மதிமுக உடன் இனி கூட்டணி கிடையாது என்று பகிரங்கமாகவே அறிவித்தார் விஜயகாந்த்.

வைகோ நேரில் வாழ்த்து
இந்த நிலையில் 66வது பிறந்தநாள் கொண்டாடும் விஜயகாந்த் வீட்டிற்கு வந்த வைகோ, அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறினார். இருவரும் அருகருகே அமர்ந்து பழைய நினைவுகளை அசைபோட்டனர்.

திருமா, தமிழிசை வாழ்த்து
விஜயகாந்தை நேரில் சந்தித்த திருமாவளவன், பொன்னாடை போர்த்தி வாழ்த்து கூறினார். பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும் நேரில் சென்று விஜயகாந்திற்கு வாழ்த்து தெரிவித்தார்.
-
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications